திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய ரகுல் ப்ரீத் சிங்.. என்ன சொல்லீருக்காங்க தெரியுமா?

சென்னை : ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.

அண்மையில் பேட்டி அளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

19 வது வயதில் கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை இவர் சம்பளம் வாங்கும் ரகுல் ப்ரீத் காதலர் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரித்து வரும் டாக்டர் ஜி மருத்துவ மாணவியாக நடித்து வருகிறார்.

காதலில் விழுந்த ரகுல் ப்ரீத் சிங்

காதலில் விழுந்த ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, பல இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். கடந்த மாதம் தனது காதலருடன் லண்டனில் பிறந்த நாளை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்.

நல்ல கதாபாத்திரத்தில்

நல்ல கதாபாத்திரத்தில்

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ஒரு சிறந்த நடிகையாக வேண்டும் என்ற பசியில் மட்டும் தான் இருக்கிறேன். இந்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளநிலையில், இதுவரை எனது நடிப்பில் ஐந்து படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இப்போது எனது முழு கவனமும் அடுத்த ஆண்டு எத்தனை படங்களில் நடிக்க வேண்டும், என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும், எந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் முழுகவனமும் இருக்கிறது.

நடிப்பின் மீது தான் கவனம்

நடிப்பின் மீது தான் கவனம்

மேலும், சவாலான கதாபாத்திரங்கள் என்ன தேடி வரவேண்டும், அந்த ரோலில் நான் சிறப்பாக நடித்து பெயர் எடுக்க வேண்டும் என்பதில்தான் எனக்கு ஆர்வம் இருக்கிறதே தவிர வேறு எதன் மீதும், எனது கவனம் செல்லவில்லை. விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை, என் முழு கவனமும் நடிப்பின் மீது தான் இருக்கிறது என பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X