இது என் அப்பா புடிச்ச போட்டோ.. ஆரஞ்சு பிகினியில் அட்ராசிட்டி பண்ணும் அயலான் நடிகை.. எகிறும் லைக்ஸ்!

சென்னை: ஆரஞ்சு பிகினியில் அயலான் பட நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட போட்டோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ் மற்றும் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது குடும்பத்துடன் மாலத்தீவில் சுற்றுலாவை கொண்டாடி வருகிறார்.

தம்பியுடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹாட்டான போட்டோவை வெளியிட்டு சமீபத்தில் இணையத்தை சூடேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய நடிகை

பான் இந்திய நடிகை

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து ரகுல் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று சூப்பர் ஹிட் ஆனது. சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் நடித்துள்ளார்.

இந்தியன் 2

இந்தியன் 2

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பேர் நடித்துள்ள அந்த படம் இன்னமும் ஷூட்டிங் தொடங்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. காஜல் அகர்வால் கல்யாணம் பண்ணிக் கொண்டு மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடுகிறார். ரகுல் குடும்பத்துடன் மாலத்தீவில் சுற்றுலாவை கழித்து வருகிறார்.

அயலான் நாயகி

அயலான் நாயகி

இந்தியன் 2 படம் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் இவர் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களின் ஷூட்டிங்கும் முழுமை பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இறுதி கட்டத்தில் அயலான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தம்பியுடன் நீச்சல் குளத்தில்

தம்பியுடன் நீச்சல் குளத்தில்

போதைப் பொருள் விவகார சர்ச்சைகளில் சிக்கி வந்த ரகுல் ப்ரீத் சிங், அந்த பிரச்சனைகள் எல்லாம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். தனது தம்பி அமன் ப்ரீத் சிங்குடன் அரை நிர்வாண கோலத்தில் நீச்சல் குளத்தில் சரக்குடன் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

பீச்சில் யோகா

பீச்சில் யோகா

ஆரஞ்சு நிற பிகினி அணிந்து கொண்டு, மாலத்தீவுக்கு சென்ற இடத்திலும் விடாமல் ரகுல் ப்ரீத் சிங் யோகா செய்யும் அழகான போட்டோவும் இணையத்தை ஆட்சி செய்து வருகிறது. அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளி வைரலாகி வருவது சிறப்பு.

அப்பா எடுத்த போட்டோ

அப்பா எடுத்த போட்டோ

காஜல் அகர்வால் மாதிரி இவரும் மாலத்தீவில் ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சித் தீனி கொடுத்து வருகிறார். மேலும், இந்த ஹாட் பிகினி புகைப்படத்தை எடுத்தது தனது அப்பா என்றும் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ராஷி கன்னா கமெண்ட்

ராஷி கன்னா கமெண்ட்

அனுஷ்கா ஷர்மா முதல் ராஷி கன்னா வரை ஏகப்பட்ட பிரபலங்களும் ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஆரஞ்சு நிற பிகினி போட்டோ ஷூட்டை பார்த்து லைக்குகளையும் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். நடிகை ராஷி கன்னா ஹார்ட் எமோஜியை போட்டு ரகுல் ப்ரீத் சிங்கின் அழகை வர்ணித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X