Rakul Preet Singh: பிரபல தயாரிப்பாளருடன் திருமணம்... சிவகார்த்திகேயன் பட நாயகியின் அதிரடி முடிவு
சென்னை: பான் இந்தியா நாயகியாக கலக்கி வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான், கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரை காதலித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், அவரை திருமணம் செய்ய ரெடியாகிவிட்டார்.
ரகுல் ப்ரீத் சிங் திருமணம்
கன்னடத்தில் 2009ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மூலம் சினிமாவில் முகம் காட்டியவர் ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமான அவர், தமிழில் தடையற தாக்க திரைப்படம் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். தமிழில் தொடர்ந்து என்னமோ ஏதோ, கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான், ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் நடித்து வருகிறார், தமிழை விடவும் இந்தி, தெலுங்கு மொழிகளில் ரகுல் ப்ரீத் சிங்கின் மார்க்கெட் வேல்யூ உச்சம் என சொல்லப்படுகிறது. டில்லியைச் சேர்ந்த ரகுல் ப்ரீத் சிங், பான் இந்தியா நடிகையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங். இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். அடிக்கடி டேட்டிங் செல்லவும் மறக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி பிப்ரவரி 22ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார்களாம். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டு முதல் நட்சத்திர ஜோடியின் திருமணமாக ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள ஜாக்கி பக்னானி, தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











