கொரோனாவில் இருந்து மீண்டு.. மீண்டும் பணிக்குத் திரும்பிய 390 போலீசார்.. ரகுல் ப்ரீத் சிங் சல்யூட்!

ஹைதராபாத்: கொரோனா காலத்தில் காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் பாராட்டி உள்ளார்.

Recommended Video

கொரோனாவில் இருந்து மீண்டு.. மீண்டும் பணிக்குத் திரும்பிய 390 போலீசார்.. ரகுல் ப்ரீத் சிங் சல்யூட்!

தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் பல மில்லியன் ரசிகர்களையும் ஃபாலோயர்களாக கொண்டுள்ளார்.

சில காவலர்கள் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த காவலர்களையும் பிரபலங்கள் சாடி வரும் நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பாராட்டு வீடியோ வரவேற்பை பெற்று இருக்கிறது.

நல்ல உள்ளம்

நல்ல உள்ளம்

கொரோனா காலத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக மூன்று மாத காலம் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

மீண்டும் ஹைதராபாத்துக்கு

மீண்டும் ஹைதராபாத்துக்கு

டெல்லியில் உள்ள தனது பெற்றோர்களை பார்க்க சமீபத்தில் டெல்லி சென்றிருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், மீண்டும் ஹைதராபாத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், ஹைதராபாத்தில் அல்லும் பகலும் உழைத்து வரும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வீடியோ மெசேஜை அனுப்பி இருக்கிறார்.

ராயல் சல்யூட்

ராயல் சல்யூட்

இந்த தொற்று பரவல் காலத்தில், ஏகப்பட்ட போலீசார், தங்கள் குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் துச்சம் என கருதி வெயிலிலும், மழையிலும் 24 மணி நேரம் காவல் காத்து, பொதுமக்களை இயல்பான நிலையில் வைத்துள்ளீர்கள் என வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும், தெலங்கானா முதல்வருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

390 போலீசார்

390 போலீசார்

ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோவை பார்த்த கமிஷனர் அஞ்சனி குமார், அவருக்கு நன்றி தெரிவித்து பதில் போட்டிருக்கிறார். "உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பால், மேலும், உற்சாகம் அடைந்து காவல் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட 390 போலீஸ் அதிகாரிகள் மீண்டும் பணிக்கு திரும்பி மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

ஜிம்முக்கு போகணும்

ஜிம்முக்கு போகணும்

கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட பெரிய படங்களின் ஷூட்டிங் தொடங்குவதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் காத்து இருக்கிறார். வெறித்தனமான வொர்க்கவுட் பிரியையான ரகுல் ப்ரீத் சிங், ஜிம் எதுவும் திறக்காத நிலையில், வீட்டில் இருந்தபடியே வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் போட்டு வைரலாக்கி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களை திக்குமுக்காட செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X