இந்த லாக்டவுன் இப்படியாக்கிடுச்சே..! சிறுமியாய் மாறி வீட்டுக்குள் கபடி ஆடிய பிரபல ஹீரோயின்!
சென்னை: லாக்டவுன் காரணமாக பிரபல ஹீரோயின் சிறு குழந்தையாக மாறி, கபடி ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. லட்சக்கணக் கானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸுக்கு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்தும் உயிரிழப்பு உயர்ந்து வருகிறது.

வாழ்வாதாரம்
இந்த தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர்.

லாக்டவுன்
இதன் காரணமாக வீட்டில் எக்சர்சைஸ், சமையல் என பல வேலைகளை செய்து வரும் நடிகர், நடிகைகள், அதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். நடிகை ரகுல் பிரீத் சிங் பிட்னஸில் ஆர்வமுள்ளவர். நேரம் கிடைக்கும்போது ஜிம்மில்தான் இருப்பார். லாக் டவுன் காரணமாக தனது வீட்டையே ஜிம்மாக மாற்றியுள்ளார்.

விளையாட்டு
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஜிம் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் தனது சகோதரருடன், குழந்தையாக இருந்தபோது ஆடிய விளையாட்டுகளை இப்போது ஆடி, வீடியோவாக வெளியிட்டுள்ளார். 'குழந்தை பருவ விளையாட்டு' என்ற, சிறிது நேரம் மட்டுமே ஓடக்கூடிய, அந்த வீடியோவில் அவர் கபடியும் ஆடுகிறார்.

குழந்தை பருவம்
இதற்கு கேப்ஷனாக, காலம் உங்களை குழந்தை பருவத்துக்கு அழைத்துச் செல்லும்போது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிலர், நாங்கள்லாம் குழந்தையா மாறி ரொம்ப நாளாச்சு என்று கூறியுள்ளனர். சிலர் இது வேற லெவல் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, த்ரோபேக் ஒர்க் அவுட் போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஓல்டா இருந்தாலும்
அதில், உலகம் தலைகீழாக இல்லாதப்போது நான் அப்படி இருந்தேன். எனது யோகா பயணம் 2018 ல் தொடங்கியது' என்று அரம்பித்து நீண்ட பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவையும் ஏராளமான ரசிகர்கள், லைக் செய்துள்ளனர். 'போட்டோ, ஓல்டா இருந்தாலும் போல்டா இருக்கு' என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

கமலின் இந்தியன் 2
நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழில், யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இப்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











