உச்சக்கட்ட கவர்ச்சி.. பாரில் செம குத்தாட்டம்.. இண்டர்நெட்டை அதிர வைத்த ரகுல் ப்ரீத் சிங்!
உச்சக்கட்ட கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் நடனமாடும் 'ஹையா ஹோ' பாடல் இண்டர்நெட்டை அதிர வைத்துள்ளது.
மும்பை: உச்சக்கட்ட கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் நடனமாடும் 'ஹையா ஹோ' பாடல் இண்டர்நெட்டை அதிர வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சூர்யா, கார்த்தி, மகேஷ் பாபு உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

தமிழில் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ரகுல் நடிக்கிறார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியில் மிலாப் மிலன் ஜவேரி இயக்கத்தில் ரகுல் ப்ரீத் மர்ஜாவான் எனும் படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் மல்கோத்ரா, ரித்தீஷ் தேஷ்முக், தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நவம்பர் 8ம் தேதி வெளியாகிறது.
இதையொட்டி அந்த படத்தின் 'ஹையா ஹோ' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாட்டில் ஒரு பாரில் ரகுல் நடனமாடுகிறார். மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்திருப்பதுடன், அவரது நடன அசைவுகளும் செக்சியாக இருக்கின்றன.
ரகுலின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. காதல் தோல்வியால் மனவேதனையில் இருக்கும் சித்தார் மல்கோத்ரா, சரக்கடித்து தன்னை தேற்ற முயல்கிறார். அவரிடம் தனக்கு ஒரு வாய்ப்பு தா என ரகுல் கேட்பது போல் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடல் யூடியூபில் டிரெண்டிங்காகியுள்ளது. பாடல் வெளியான இரண்டு தினங்களில் 60 லட்சம் பார்வைகளை தொட்டுவிட்டது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர் பாடலை லைக் செய்துள்ளனர். மேலும், இந்த பாடலை பலரும் டவுன்லோட் செய்து, மற்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











