மாலத்தீவில் ஜில் டைம்.. அந்தப் பக்கம் பிகினி.. இந்தப் பக்கம் ஃபேமிலி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை!

By

சென்னை: நடிகை ரகுல் பிரீத் சிங், மாலத்தீவில் இருந்து தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங்.

இப்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

ஜிம் ஆக்கினார்

ஜிம் ஆக்கினார்

தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். பிட்னஸில் அதிக ஆர்வமுள்ள நடிகை ரகுல் பிரீத் சிங், நேரம் கிடைக்கும்போது ஜிம்மில்தான் இருப்பார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தனது வீட்டையே ஜிம்மாக மாற்றி இருந்தார். அவர் சில ஃபிட்னஸ் ஸ்டூடியோக்களையும் நடத்தி வருகிறார்.

வழக்கில் சிக்கினார்

வழக்கில் சிக்கினார்

சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்.

மாலத்தீவில் ரகுல்

மாலத்தீவில் ரகுல்

தெலுங்கு பட ஷூட்டிங் முடிந்த கையோடு ஹாலிடேவுக்காக இப்போது மாலத்தீவு சென்றிருக்கிறார், ரகுல் பிரீத் சிங். அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இப்போதும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

எக்கச்சக்க லைக்ஸ்

எக்கச்சக்க லைக்ஸ்

பீச்சில் ஜாலியாக ஊஞ்சலில் படுத்தபடி, புதிய பிகினி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ். பிரபல நடிகை லட்சுமி மன்சு, இந்த போட்டோவால், இன்ஸ்டா பற்றிக்கொள்கிறது என்று இதற்கு பதிலளித்துள்ளார். சிலர் தயவு ஏதாவது நல்ல டிரெஸை உடுத்துங்க என்று கூறியுள்ளனர்.

ஜில் டைமா?

ஜில் டைமா?

சிலர், அங்க காஜல், சமந்தாவை மீட் பண்ணுனீங்களா? என்று சிலரும் கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு இது ஜில் டைமா? என்று சிலரும் கேட்டுள்ளனர். ஸ்டன்னிங் லுக் ரகுல், நீங்க வேற லெவல் என்று சிலர் கூறியுள்ளனர்.

குடும்ப போட்டோ

குடும்ப போட்டோ

மற்றொரு பதிவில் தனது குடும்ப போட்டோவை பதிவு செய்துள்ளனர். அப்பா, அம்மா, மற்றும் சகோதரருடன் இருக்கும் அந்த போட்டோவுக்கும் ரசிகர்கள் ஜாலியான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஹேப்பி ஃபேமிலி வாழ்த்துக்கள் என பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
இந்த போட்டோஸ், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X