உள்ளாடையுடன் வொர்க்கவுட்.. டி-ஷர்ட்டை எப்படி போடுறாரு பாருங்க.. வித்தை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!
சென்னை: இந்தியன் 2 பட நடிகை ரகுல் ப்ரீத் சிங், உள்ளாடையுடன் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக் படமான கில்லி படத்தில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
தொடர்ந்து, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2012ம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பெரிதாக ஓடவில்லை
தடையற தாக்க படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அந்த படத்தைத் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் வெளியான புத்தகம் படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால், அந்த படமும் ரகுலுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. கெளதம் கார்த்தி நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான என்னமோ ஏதோ படம் தான் ரகுலை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

அண்ணன், தம்பி
பின்னர், தெலுங்கு திரையுலகில் பிசி ஹீரோயினாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வரும் எச். வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் நடித்த ரகுல், தேவ் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார்.

இந்தியன் 2
தேவ் மற்றும் என்.ஜி.கே படங்களும் தமிழ் சினிமாவில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கரும் அந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

உள்ளாடையுடன் வொர்க்கவுட்
கொரோனா காலத்திலும் தனது உடற்பயிற்சியை விடாது செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அண்மையில் வவ்வால் போல தொங்கும் போட்டோவை பதிவிட்ட ரகுல், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், உள்ளாடையுடன் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்படியும் மாட்டலாம்
அந்த வொர்க்கவுட் வீடியோவில், உடற்பயிற்சி செய்தபடியே, தனது டி- ஷர்ட்டை ரகுல் ப்ரீத் சிங் போடுவது பல பிரபலங்களையும், ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது. மேலும், தன்னுடைய சில நண்பர்களை இதே போல வீடியோ எடுத்து போடவும் சவால் விட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
View this post on InstagramA post shared by Rakul Singh (@rakulpreet) on
சவாலை ஏற்ற நடிகை
நெட்பிளிக்ஸில் வெளியான கியாரா அத்வானியின் கில்டி வெப் படத்தில் நடித்த நடிகை ஆகான்ஷா ரஞ்சன் கபூர், ரகுல் ப்ரீத் சிங்கின் சவாலை ஏற்பதாக கமெண்ட் செய்துள்ளார். ரகுலின் இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன மாநகரம் பட நடிகர் சந்தீப் கிஷன் இவ்ளோ அசால்ட்டா எப்படி பண்றீங்க என பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











