பிரபல ஹீரோவுடன் மீண்டும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமான தமிழ் நடிகை.. மிரட்டும் காமெடி படமாமே!

By

சென்னை: பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார்.

தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங்.

இப்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

ஜிம் ஆக்கினார்

ஜிம் ஆக்கினார்


தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். ஃபிட்னஸில் அதிக ஆர்வமுள்ள நடிகை ரகுல் பிரீத் சிங், நேரம் கிடைக்கும்போது ஜிம்மில்தான் இருப்பார். லாக்டவுன் நேரத்தில் தனது வீட்டையே ஜிம்மாக மாற்றி இருந்தார். அவர், சில ஃபிட்னஸ் ஸ்டூடியோக்களையும் நடத்தி வருகிறார்.

வழக்கில் சிக்கினார்

வழக்கில் சிக்கினார்

சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

சமீபத்தில் ஹாலிடேவுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அது வைரலாது. நடிகை ரகுல் பிரீத் இந்தியில் அர்ஜுன் கபூர் ஜோடியாக காதல் படம் ஒன்றில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கொரோனாவுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

பின்னர், அஜய் தேவ்கன் நடிக்கும் மே டே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில், அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதை அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கிறார். இதற்கிடையே மேலும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகை ரகுல் பிரீத் சிங்.

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா

காமெடி படமான இதிலும் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். படத்துக்கு தேங்க் காட் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்திரகுமார் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதை சோசியல் மீடியாவில் தெரிவித்திருக்கிறார் ரகுல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X