Indian 2: கமல் மருமகளாகும் ரகுல், அப்படின்னா காஜல் மாமியாரா?

By Siva

சென்னை: இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் படம் இந்தியன் 2. லோக்சபா தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில் ப்ரியா பவானிசங்கர், வித்யுத் ஜாம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரகுல் ப்ரீத்

ரகுல் ப்ரீத்

இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கை அணுகினாராம் ஷங்கர். ஷங்கர் படத்தில் நடிக்க பல நடிகைகள் ஏங்கிக் கிடக்க தன்னை தேடி வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடிக்கிறாராம் ரகுல்.

சித்தார்த்

சித்தார்த்

சேனாபதியின் பேரன், சந்துருவின் மகனாக நடிக்கிறார் சித்தார்த். சேனாபதி, சந்துரு ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் கமல் ஹாஸன் நடிக்கிறார். அப்படி என்றால் காஜல் அகர்வாலுக்கு ஆன்ட்டி கதாபாத்திரமா என்று அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஜல் அகர்வால் ரகுல் ப்ரீத் சிங்கின் மாமியாரா, ஓ மை காட் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

காஜல்

காஜல்

காஜல் அகர்வால் கதாபாத்திரம் முக்கியமானது, ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும், ரகுல் ப்ரீத் சிங்கின் கதாபாத்திரமும் முக்கியமானது. இதில் உண்மையில் எந்த கதாபாத்திரம் முக்கியமானது. ஒன்றுமே புரியவில்லையே. ஷங்கர் செய்தால் சரியாகத் தான் இருக்கும். படம் வெளியானால் இந்த குழப்பம் எல்லாம் தீர்ந்துவிடப் போகிறது.

கோலிவுட்

கோலிவுட்

ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடித்துள்ளதால் நாக சைதன்யா ஜோடியாக நடிக்கவிருந்த பட வாய்ப்பு ரகுலை விட்டுச் சென்றது. இந்நிலையில் அவருக்கு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்மை காலமாக ரகுலுக்கு பட வாய்ப்புகள் வருவதும், போவதுமாக உள்ள நிலையில் பெரிய வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X