200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்.. மனிதாபிமானத்துடன் ரகுல்.. மற்ற நடிகைகளும் உதவலாமே !
சென்னை : ஒரு மாதத்திற்கு தேவையாள மளிகை பொருட்களை சுமார் 200 குடும்பங்களுக்கு வழங்கினார் ரகுல் ப்ரீத் சிங்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் அனைவரும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை இந்த ஊரடங்கு புறட்டிபோட்டுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை ..

வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் தனது பொழுபோக்கிற்காக சாப்பிடுவதும், ஏழை மக்கள் ஒரு வேளை உணவுக்காக தேடி அலைவதும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. இதனை சரி செய்வதற்காக சினிமா துறையில் உள்ளவர்களும்,மற்ற துறையில் உள்ளவர்களும், நிவாரணநிதியாக தங்களால் முடிந்தவற்றை செய்துவருகின்றனர்.
நடிகர்கள் ஒரு புறம் உதவி செய்தாலும், நடிகைகள் பெரும்பாலும் இந்த மாதிரியான விஷயத்தில் தலையிடுவதில்லை. ஆனால் ஒரு நடிகை கொரோனா வருமே என்ற கவலை கூட படாமல் என்ன செய்தார் தெரியுமா ?

தினமும் மாடலிங், போட்டோஷூட், சமையல், யோகா, உடற்பயிற்சி போன்ற வேலைகளில் பிஸியாக இருந்த ஸ்பைடர் நாயகி ரகுல் ப்ரீத் சிங். சென்ற வாரம் 200 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருள்களை தானாகவே முன் வந்து வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து, போட்டோஸ் எதுவும் வெளியிடாத அவர் நேற்று அந்த போட்டோஸ் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் வெளிவந்த சில நேரங்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகத்தில் மாஸ்க்குடன், சிவப்பு டாப்ஸ், ப்ளூ ஜீன்ஸ் அணிந்து இருந்த அவரின் புகைப்படம் வலைத்தளங்களில் வெகுவாக பரவப்பட்டு வருகிறது. அடடா நம்ம ரகுலா இது என்று கேட்கும் அளவிற்கு அவர் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மளிகை பொருள்களை தன் வீட்டின் அக்கம் பக்கம் இருக்கும் ஏழை மக்களுக்கு தானாகவே சென்று தந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் வெறும் ரீல் ஹீரோயின் இல்லை உண்மையாகவே இவங்க ரியல் ஹீரோயின் என்று தோன்றுகிறது. இது போல் மற்ற நடிகைகளும் முன் வந்து உதவிசெய்ய வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











