தெலுங்கு வேணாம்... தமிழ், ஹிந்தியில் கவனம் செலுத்தும் ரகுல் ப்ரீத் சிங்!
Recommended Video

வருங்கால கணவர் ஆறடி உயரம் இருக்க வேண்டும் : ரகுல் ப்ரீத் சிங்
தமிழ் கைவிட்ட நிலையில் தெலுங்கு பக்கம் போய் முன்னணி ஹீரோயின் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு முன்னணி ஹீரோக்கள் முக்கால்வாசி பேருடன் நடித்துவிட்டார்.
தெலுங்கு மார்க்கெட்டைக் குறி வைத்த தமிழ் ஹீரோக்கள் தயவால் தமிழ் பக்கம் மீண்டும் வந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படங்களை தவிர்க்கிறாராம்.

தமிழில் ஒரே நேரத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகிய மூவரது படங்களில் நடிக்கிறார். இதில் கார்த்தியுடன் ஜோடி சேர்வது இரண்டாவது முறை. இவை தவிர ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
ஹிந்தியில் ரகுல் நடிப்பில் வெளியான அய்யாரே படம் சமீபத்தில் வெளியானது. ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications