ஜப்பானில் வெளியான ஆர்ஆர்ஆர்… டோக்கியோவில் படிக்கும் இந்திய மாணவர்களை சந்தித்த ராம் சரண்
ஐதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ஆஸ்கார் விருதுவிழாவில் போட்டியிடும் நிலையில், தற்போது ஜப்பானிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி
பாகுபலியை தொடர்ந்து ராஜமெளலி இயக்கிய'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து பிரமிக்க வைத்தது. எப்போதும் போல இந்த முறையும் பிரம்மாண்டமான மேக்கிங்கில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய ராஜமெளலி. விஷுவல் டிரீட் கொடுத்து மிரட்டியிருந்தார்.

ஜப்பானில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்
திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் வெளியானது ஆர்ஆர்ஆர். ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், ஜீ5 தளங்களில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தொடர்ந்து 11 வாரங்கள் ட்ரெண்டிங்கில் இருந்து அசத்தியது ஆர்ஆர்ஆர். இந்நிலையில், இந்தப் படம் தற்போது ஜப்பானிலும் வெளியாகியுள்ளது. ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியான ஆர்ஆர்ஆர், அங்கும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் ப்ரோமோஷனுக்காக ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர்.

இந்திய மாணவர்களை சந்தித்த ராம் சரண்
ஜப்பானில் ஆர்ஆர்ஆர் படம் குறித்து செய்தியாளர்கள், ரசிகர்களை சந்தித்து அவர்கள் உரையாடினர். இதனிடையே, ராம் சரணும் அவரது மனைவியும் டோக்கியோவில் உள்ள இந்தியா இண்டர்நேஷனல் பள்ளிக்கு ஜோடியாக சென்றனர். அவர்கள் இருவருக்கும் இந்தியா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், ஆடல் பாடலுடன் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். மேலும், ராம் சரணுக்கும் அவரது மனைவி உபாசனா கொனிடேலாவுக்கும் அழகான பொம்மைகளை பரிசாக கொடுத்து சிறிது நேரம் உரையாடினர். இந்த நிகழ்ச்சியால் ராம் சரணும் அவரது மனைவியும் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வசூல் சாதனை படைக்குமா?
முன்னதாக ஜப்பானில் இதுவரை அதிகம் வசூல் செய்த இந்தியப் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து தான் டாப்பில் உள்ளது. மேலும், சில ரஜினிகாந்தின் படங்களும் ஜப்பான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ராஜமெளலியின் பாகுபலி படம் தான் ஜப்பானில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கும், அங்கு வசிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆர் ஆர் ஆர் திரைப்படம் மொத்தம் 15 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











