அல்லு அர்ஜுனை பார்க்க அலைகடலென திரண்ட கூட்டம்.. ராம்சரணுக்கு மக்கள் வரவேற்பு.. அரசியல் களமே அதிருது!
ஹைதராபாத்: நடிகர் விஜய்க்கு கேரளா செல்லும்போது எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதோ அதைவிட பல மடங்கு அல்லு அர்ஜுனுக்கு நந்தியாளா பகுதியில் மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு ஆர்ப்பரிக்கும் காட்சியை பார்த்து ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசியலே ஆடிப் போய்விடும் போல தெரிகிறது.
நடிகர் ராம்சரண் பித்தாபுரத்தில் உள்ள கோயிலுக்கு சென்ற நிலையில், அவரையும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

அதே போல அல்லு அர்ஜுனையும் ரசிகர்கள் ஒரு இன்ச் கூட நகர விடாமல் மிகப்பெரியளவில் கூட்டமாக நின்று அவருக்கு கொடுத்த உற்சாக வரவேற்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புஷ்பா வந்துட்டாரு: இந்த ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நந்தியாளா பகுதிக்கு அல்லு அர்ஜுன் வந்த நிலையில் அவருக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், அல்லு அர்ஜுன் காரை ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கடல் போல சூழ்ந்து கொண்டனர். அதன் பின்னர் ரசிகர்கள் வெள்ளத்தில் காரிலிருந்து இறங்கி கட்சி அலுவலகத்தின் மாடிக்கு சென்று அல்லு அர்ஜுன் கையசைத்தும் அந்த கட்சிக்கு ஆதரவளித்தும் தேசிய காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
பித்தாபுரத்தில் ராம்சரண்: இந்த ஆண்டு கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ராம் சரண் தனது அம்மாவுடன் ராஜமுந்திரியில் உள்ள பித்தாபுரம் குக்குட்டேஸ்வரா கோயிலுக்கு வருகை தந்த நிலையில், அவரையும் மக்கள் வெள்ளம் சூழ்ந்துக் கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. ராம்சரணின் சித்தப்பா பவன் கல்யாணும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாணுக்கான ஆதரவையும் ராம்சரண் வழங்கியுள்ளார்.
அல்லு அர்ஜுன் ஆதரவு: YSR காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரவி சந்திர கிஷோர் ரெட்டிக்கு தனது முழு ஆதரவையும் வழங்கி உள்ளார். அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண் இன்று ஒரே நாளில் பொதுமக்களை சந்தித்துள்ள நிலையில், இருவரது மாஸை பார்த்து அரசியல் கட்சிகள் எல்லாம் ஆடிப் போய் கிடப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











