Don't Miss!
- Lifestyle
ஈஸியான முறையில் பிரட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
- News
"நெறஞ்ச மனசு" விஜயகாந்த்.. மாலையும் கழுத்துமாக.. பட்டுவேட்டி + பளிச் விபூதி + அதே கூலிங் கிளாஸ்..ஆஹா
- Automobiles
பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!
- Finance
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனை இல்லை.. FPO-க்கு முழுக்க விண்ணப்பம்.. அதானி பெரும் நிம்மதி!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Technology
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புஷ்பா இயக்குநர் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ஆர்ஆர்ஆர் பட ஹீரோ?: டோலிவுட்டின் அடுத்த ஆக்சன் மஜா!
ஹைதராபாத்: டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரணும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
மகதீரா, ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள ராம் சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ராம் சரணின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியானது
சிரஞ்சீவியின்
காட்ஃபாதர்’
ட்ரெய்லர்:
ஆக்சனில்
அதிரடி
காட்டும்
சல்மான்
கான்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண்
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாராக வலம் வருகிறார் சிரஞ்சீவி. அவரது மகனான ராம் சரணும் டோலிவுட்டின் டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார். ராம் சரணை கம்ப்ளிட் ஹீரோ மெட்டீரியலாக மாற்றி அவரை திரையுலகில் களமிறக்கினார் சிரஞ்சீவி. 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான Chirutha படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராம் சரண், இரண்டாவது படத்திலேயே ராஜமெளலியுடன் இணைந்தார். இந்தக் கூட்டணியில் வெளியான 'மகதீரா' திரைப்படம் ராம் சரணுக்கு பக்கா கமர்சியல் ஹிட் கொடுத்து அசத்தியது.

மீண்டும் ரங்கஸ்தலம் கூட்டணி
தொடர்ந்து தரமான படங்களில் நடித்துள்ள ராம் சரணுக்கு இந்தாண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ராம் சரண் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்ததுடன், தற்போது ஆஸ்கர் போட்டியிலும் பங்கேற்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 'ஆர்சி 15' படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் 'ரங்கஸ்தலம்' இயக்குநருடன் கூட்டணி வைக்கவுள்ளாராம் ராம் சரண்.

இணைந்த புஷ்பா இயக்குநர்
ராம் சரண் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று 'ரங்கஸ்தலம்.' 2018ம் ஆண்டு வெளியாகி மரண மாஸ் ஹிட் கொடுத்த இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். கடந்தாண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படமும் பவர்ஃபுல் ஹிட் அடித்தது. இந்நிலையில், ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதையை சுகுமார் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், ராம் சரண் நடிக்கும் இந்தப் படத்தை புச்சி பாபு சனா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப் புயல் தரிசனம்
ராம் சரணுக்காக சுகுமார் எழுதிய கதை விளையாட்டைப் பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாம். புச்சு பாபுவும் ராம் சரணை சந்தித்து கதை சொல்ல, அவரும் ஓக்கே என கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஏஆர் ரஹ்மான் இல்லையென்றால் தேவி ஸ்ரீ பிரசாத் கமிட் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. ராம்சரண், புஷ்பா இயக்குநர், ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் என மெகா கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தெலுங்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.