Ram Charan-Upasana : ராம்சரண் மனைவிக்கு வளைகாப்பு.. யார் யார் வந்தாங்க தெரியுமா?

சென்னை : ராம்சரணின் மனைவி உபாசனாவிற்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், அப்பாவை போலவே திரையுலகில் டாப் ஹீரோவாக வளர்ந்துள்ளார்.

 Ram Charan and his wife Upasanas baby shower function

இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.

ராம்சரண் : இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். முதல் படமே வெற்றி பெற்று, வசூலை வாரிக்குவித்தது. அதன் பின் ராஜமெளலி இயக்கிய மகதீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வாய்பிளந்து போனார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.

 Ram Charan and his wife Upasanas baby shower function

அடுத்தடுத்த ஹிட் படம் : மகதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி தமிழ் ஆடியன்சையும் கவர்ந்தது. இதையடுத்து, Racha, Naayak, Yevadu, Dhruva, Rangasthalam என அடுத்தடுத்து வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை கமர்ஷியல் வெற்றி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் ராம்சரண். மீண்டும் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.

 Ram Charan and his wife Upasanas baby shower function

வளைகாப்பு : ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், சிரஞ்சீவி தான் தாத்தாவாகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, கர்ப்பிணியான உபாசனாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், சானியா மிர்சா மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருக்கும் தம்பதிகளுக்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 Ram Charan and his wife Upasanas baby shower function

வீட்டில் விருந்து : ராம்சரணின் மனைவி உபாசனா வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் தனது வீட்டில் தோழிகளுடன் விருந்து ஒன்றை நடத்தினார். இந்த விருந்தில் ஷில்பா ரெட்டி, ராம்சரணின் சகோதரிகள் சுஷ்மிதா, ஸ்ரீஜா கல்யாண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உபானாவுக்கு ஜூலை மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் பிரசவத் தேதியை கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X