அடேங்கப்பா.. அப்போ அது சிஜி இல்லையா? நீருக்கடியில் ரியலாக ஓடிய ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்!
சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட புரமோஷன் விஜய் டிவியில் டிடி உடன் நடத்தப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு இன்று விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது.
இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மூவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆர்.ஆர்.ஆர் டீம்
இவிபி பிலிம் சிட்டியில் பைக்குகள் மற்றும் கார்கள் புடைசூழ இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டிஆர் அரங்கிற்குள் நுழைந்தனர். ரொம்பவே சிம்பிளாக மூவரும் நடந்து கொண்டது மற்றது தமிழில் அழகாக ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த பிரத்யேக தகவல்களை கூறினர்.

ரஜினி முதல் விஜய் வரை
நிகழ்ச்சியின் தொகுப்பாளினி டிடி நீலகண்டன் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரிடம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை காட்டி கேள்விகளை கேட்க ஒவ்வொருத்தர் குறித்தும் சூப்பரான மாஸ் தகவல்களை மூவரும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பல்கேரியா காட்டில்
கொமரம் பீமாக நடித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர் காட்டில் ஓடி வந்து புலியை நேருக்கு நேர் சந்தித்து உருமும் காட்சியை டிரைலரில் பார்த்த டிடி நீலகண்டன் அந்த காடு சிஜியா என கேட்க அது ரியல் காடு தான். பல்கேரியா நாட்டில் உள்ள காட்டில் தான் ஓடினேன் என செம கூலாக சொன்னார் ஜூனியர் என்.டி.ஆர்

40 அடி தண்ணீருக்குள் ஓட்டம்
படத்தில் இடம்பெற்ற ஒரு 4 செகண்ட் ஷாட்டுக்காக 4 நாட்கள் பயிற்சி செய்து ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக 40 அடி தண்ணீருக்குள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நிஜமாகவே ஓடினார்கள் என்றும் அது கொஞ்சம் கூட சிஜி இல்லை என்று சொன்னதும் டிடி நீலகண்டன் மற்றும் அல்ல அந்த பேட்டியை பார்த்த அத்தனை ரசிகர்களும் ஆடிப் போனார்கள்.

எல்லாமே ரியல்
டிரைலரை பார்க்கும் போது ஏகப்பட்ட சிஜி மாயாஜாலங்கள் நடந்துள்ளதாக தெரிந்த நிலையில், ஒவ்வொரு காட்சியும் ரியலாக பயிற்சி செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்றும் ராஜமெளலி ஹீரோக்களால் எதுவும் சாத்தியம் என்றும் அந்தளவுக்கு எங்களை பெண்டு நிமிர்த்திவிட்டார் மனுஷன் என மனசில் உள்ள பாராத்தை எல்லாம் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் கொட்டித் தீர்த்தனர்.

புரமோஷன் வீணாப்போச்சே
மும்பை, ஹைதராபாத், சென்னை, கேரளா என ஒவ்வொரு மாநிலமாக இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரபலங்கள் அனைவரும் தொடர்ந்து செய்த பிரம்மாண்ட புரமோஷன்கள் எல்லாம் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு அத்தனையும் வீணாய் போனது தான் ரொம்பவே வேதனையான விஷயம். எப்போ ரிலீஸ் ஆனாலும் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றாலும் திட்டமிட்ட ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருப்பது மனதளவில் படக்குழுவை பெரிதளவில் பாதித்து இருக்கும்.


Click it and Unblock the Notifications











