ராம் சரண், ஷங்கர் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா!
சென்னை : இந்தியன் 2 இயக்கிவரும் இயக்குனர் ஷங்கர் அதை தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மிக பிரம்மாண்டமாக உருவாகயிருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தடைகளை தாண்டி
இந்திய படங்களை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பிரமாண்டமாக இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ஷங்கர் இப்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 இயக்கி வருகிறார். பல்வேறு கட்டங்களாக பல தடைகளை தாண்டி இதன் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டுள்ளது இதில் காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மெகா பட்ஜெட்
இந்தியன் 2 க்கு பிறகு தமிழில் எந்த ஒரு படத்தையும் இயக்கும் எண்ணம் இல்லை என தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இது ராம் சரணுக்கு 15-வது திரைப்படமாகும்.

முக்கிய வேடத்தில்
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இதில் ஹீரோயினாக க்யாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இதுதவிர சல்மான்கான், விஜய்சேதுபதி மற்றும் சிரஞ்சீவி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என சொல்லப்படுகிறது.

அந்நியன் ஹிந்தி ரீமேக்
முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்க உள்ளது என்ற அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழ் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஷங்கர் முதல் முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தை இயக்குவது இதுவே முதல் முறை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு பிறகு அந்நியன் ஹிந்தி ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











