10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான ராம் சரண் மனைவி…மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!
சென்னை : திருமணமாகி 10 ஆண்டுகளான நிலையில், நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் பெற்றோராகி உள்ளனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கிறார்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.

ராம் சரண்
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை வாரிக் குவித்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வாய்பிளந்து போனார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.

பல ஹிட் படங்களில்
மகதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி இங்கேயும் சக்கைப்போடு போட்டது. இந்த படத்தின் மூலம் ராம்சரண் தமிழ் ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, Racha, Naayak, Yevadu, Dhruva, Rangasthalam என வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை கமர்ஷியல் வெற்றி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் ராம்சரண்.

ஆர்ஆர்ஆர் படத்தில்
இதையடுத்து, மீண்டும் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல ஜூனியர் என்டிஆர் பீம் ரோலில் நடத்திருந்தார். இரண்டு ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு இருவரின் கதாபாத்திரங்களும் ரேஸில் மாறி மாறி முந்தி இருந்தது.அதிக வசூலை வாரிக்குவித்த படமாக ஆர் ஆர்ஆர் இருந்தது.

10 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில், ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோராக உள்ள மகிழ்ச்சியான செய்தியை, ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அந்த பதிவில், ஸ்ரீ ஹனுமானின் ஆசியுடன், உபாசனா மற்றும் ராம் சரண் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க உள்ளார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என சிரஞ்சீவி அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் ராம்சரணுக்கும் உபாசனாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ராம்சரண் தந்தையாகி உள்ளார், சிரஞ்சீவி தாத்தாவாகி உள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் ராம்சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆர்சி 15
ராம் சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











