கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக 16வது படம் மற்றும் 17வது படங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ராம்சரணின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
நாட்டுக் கூத்து பாடல் மூலம் ஆஸ்கர் வரை ஒலித்த ராம்சரணின் புகழ் அடுத்து ஜரகண்டியாக பட்டித் தொட்டி எங்கும் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரணின் சொத்து மதிப்புக்கு போட்டியாக அவரது மனைவி உபாசனா கொனிடேலாவின் சொத்து மதிப்பும் சுமார் 1000 கோடிக்கும் அதிகமாக இருப்பது ஆச்சர்யத்தை ஆழ்த்தியுள்ளது. இருவரது சொத்து மதிப்பு குறித்தும் ராம்சரணின் சம்பளம் மற்றும் பங்களா, கார்கள் என அனைத்தும் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
39 வயசாகிடுச்சு: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் செல்ல மகன் ராம்சரணுக்கு அதற்குள் 39 வயதாகிவிட்டது. கடந்த 2012ம் ஆண்டு தான் ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு திருமணம் ஆனது. திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்த நிலையில், ஃப்ரீஸ் செய்து வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி உபாசனா அழகிய பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
2500 கோடி சொத்து: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்துக்களை எல்லாம் சேர்க்காமல் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவின் சொத்து மட்டுமே 2500 கோடி என்று மலைக்க வைக்கின்றனர். இதில், கணவருக்கு சரிசமமாக சொத்துக்களை உபாசனா வைத்திருப்பது தான் ஆச்சர்யம்.
உபாசனா சொத்து மதிப்பு: அப்போலோ மருத்துவமனையின் உரிமையாளர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி தான் ராம்சரண் திருமணம் செய்துக் கொண்ட உபாசனா. அப்போலோ சாரிட்டியின் வைஸ் சேர்மேனாகவும் உபாசனா செயல்பட்டு வருகிறார். 1130 கோடி ரூபாய்க்கு தனியாக சொந்தக்காரராக உபாசனா இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண் பேங்க் பேலன்ஸ்: ராம்சரண் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் படம் 1100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்ததை போல ராம்சரணின் பேங்க் பேலன்ஸிலும் சுமார் 1370 கோடி சொத்து இருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்கு 45 கோடி சம்பளம் வாங்கிய ராம்சரண். ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள கேம்சேஞ்சர் படத்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். மேலும், ஆர்சி 16 படத்துக்கு 120 கோடி சம்பளமும் ஆர்சி 17 படத்துக்கு 150 கோடி சம்பளம் எனக் கூறுகின்றனர்.
25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட வீடு: ஹைதராபாத்தில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட வீட்டில் தான் ராம்சரண், உபாசனா தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.
சொகுசு கார்கள்: ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் எனும் 9.57 கோடி ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லி காரை ராம்சரண் வைத்துள்ளார். 4 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் சொகுசு கார், ஃபெராரி போர்ட்டோஃபினோ 3.5 கோடி ரூபாய் மற்றும் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு காரும் இவர்களிடம் உள்ளன. மேலும், ஒரு பிரைவேட் ஜெட்டும் ராம்சரண் வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











