Ramcharan: தாத்தா சிரஞ்சீவி ஆசைப்பட்டது நிறைவேறிடுச்சு.. ராம்சரணுக்கு பிறந்த ட்வின்ஸ்.. ஆண் வாரிசு!

ஹைதராபாத்: வீடே ஒரு லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கு என மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில் பேசியிருந்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், அவர் ஆசைப்பட்டது போல ராம்சரணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இன்னொரு அதிர்ஷ்ட தேவதையாக பெண் குழந்தை ஒன்றும் பிறந்து ராம்சரண் - உபாசனா தம்பதியினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் டோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருகிறார். தந்தை 8 அடி பாய்ந்தால் தான் 80 அடி பாய்வேன் என ராஜமெளலியின் மகதீரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களில் மிரட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நடிகராகவும் மாறியுள்ளார்.

Ram Charan and Upasana Konidela Welcome Twins Megastar Chiranjeevi s Wish Comes True
Photo Credit:

சிரஞ்சீவி சுரேகாவை என்பவரை திருமணம் செய்துக் கொண்டு 2 மகள்களையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தார். இந்நிலையில், அப்பாவை போலவே ராம்சரணுக்கும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என பிறந்துள்ளது டோலிவுட்டை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் பெண் குழந்தை: நடிகர் ராம்சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனரின் பேத்தியான உபாசனாவை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் ஆன உடனே இருவரும் குழந்தையை பெற்றெடுக்கவில்லை. கருமுட்டையை உறையவைத்திருந்த உபாசனா சரியான நேரத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நம்முடைய திருமண வாழ்க்கையை முதலில் வாழலாம் என்கிற முடிவில் இருந்தார். கடைசியாக 2023ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பெண் குழந்தைக்கு க்ளின் காரா என்கிற பெயரையும் சூட்டி குடும்பமே வைபவமாக கொண்டாடினார்.

ராம்சரணுக்கு ட்வின்ஸ்: முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் உபாசனா கருவுற்று இருப்பதை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்தில் அறிவித்து வளைகாப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டனர். உபாசனாவின் அம்மா ஷோபனா காமினேனி ஏற்கனவே தனது மகளுக்கு ட்வின்ஸ் பிறக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு நேற்று இரவு ட்வின்ஸ் பிறந்துள்ளது.

ஆண் வாரிசு: தற்போது பிறந்துள்ள ட்வின்ஸில் ஒன்று ஆண் குழந்தை இன்னொன்று பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி எதிர்பார்த்ததை போலவே ஒரு ஆண் வாரிசையும் உபாசனா பெற்றுக் கொடுத்துள்ளார். அப்பாவை போலவே ராம் சரணுக்கும் 2 மகள்கள் ஒரு மகன் பிறந்துள்ள நிலையில், பெத்தி நடிகர் சந்தோஷத்தின் உச்சத்தில் மிதக்கிறார்.ராம்சரண் - உபாசனா தம்பதியினருக்கும் புதிதாக பிறந்துள்ள ட்வின்ஸ் குழந்தைகளுக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X