ராம்சரண்- உபாசனாவின் இரட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழா.. பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா!

சென்னை : மெகா ஸ்டார் ராம் சரண் - உபாசனா தம்பதியினருக்கு ஜனவரி 31ந் தேதி, ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தையும் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள ராம் சரணின் ரசிகர்கள் கொண்டாடினார்கள். தற்போது குழந்தைகளின் பெயர்சூட்டு விழா தடபுடலாக நடந்துள்ளது. இரட்டை குழந்தைகளுக்கும் குடும்ப பாரம்பரிய முறைப்படியும் ஆன்மீகப்பூர்வமாகவும் பெயர் வைத்துள்ளனர். அந்த தகவலை சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Ram Charan Upasana twins
Photo Credit:

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் மற்றும் உபாசனாவை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு க்லின் காரா கொனிடேலா என பெயர் வைத்தனர். மீண்டும் கர்ப்பமான உபாசனாவிற்கு கடந்த மாதம் ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

குழந்தைகளின் பெயர்: இதையடுத்து, இரட்டை குழந்தைகளுக்கு சிவ ராம் கொனிடேலா மற்றும் அன்வீரா தேவி கொனிடேலா என பெயர் வைத்துள்ளனர். இதை ராம் சரணின் தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த பெயர்களுக்குப் பின்னால் உள்ள ஆன்மீக முக்கியத்துவத்தையும் குடும்ப மரபையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்."எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் தெய்வீக அருளுடன் எங்கள் இரண்டு அழகான குழந்தைகளின் பெயர்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "𝑺𝒉𝒊𝒗𝒂 𝑹𝒂𝒎 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂" & "𝑨𝒏𝒗𝒆𝒓𝒂 𝑫𝒆𝒗𝒊 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂". சிவ ராம் என்பது இரண்டு நித்திய இலட்சியங்களின் ஆழமான சங்கமம். "சிவன்" சிவ சங்கர வர பிரசாதால் ஈர்க்கப்பட்டு, உள் வலிமை, ஆன்மீக ஆழம் மற்றும் அமைதியை பிரதிபலிக்கிறது பெயராகும்.

அர்த்தமுள்ள பெயர்: அதே போல எனது பேத்திக்கு "அன்வீரா தேவி" தெய்வீக பெண்மையின் அரிய மற்றும் சக்திவாய்ந்த பெயர். கனக துர்கா தேவியின் ஆசீர்வாதங்களால் ஈர்க்கப்பட்ட அன்வீரா அச்சமின்மை, மீள்தன்மை மற்றும் தெய்வீக பாதுகாப்பைக் குறிக்கிறது. கருணை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத வலிமையை பிரதிபலிக்கும் ஒரு பெயராகும். சிவ ராமர் மற்றும் அன்வீரா தேவி அவர்களுக்கு அழகான வாழ்க்கை அமையட்டும் என பதிவிட்டுள்ளார். ராம் சரண் மற்றும் உபாசனாவின் இரட்டை குழந்தைகள் பெயர் சூட்டும் விழாவை, குடும்ப பாரம்பரிய விழாவாக பூஜையை நடத்தி உள்ளனர். இந்த விழாவில், இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X