ஆச்சார்யா படப்பிடிப்பை நிறுத்திய ராம் சரண்...காரணம் என்ன தெரியுமா
ஐதராபாத் : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ராம் சரண் தான். சிரஞ்ஜீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக ராம் சரண் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ராம் சரண் தான்.
ராம் சரணின் உறவினரும் நடிகருமான பவன் கல்யாண், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ராம் சரணும், அவரது மனைவி உபஷ்னா காமினினியும் தான் கவனித்து கொள்கின்றனர். பண்ணை வீட்டில் தனிமையில் இருக்கும் பவன் கல்யாணின் மருத்துவ தேவைகளை இவர்கள் இருவரும் தான் கவனித்து வருகின்றனர்.

இதனால் பவன் கல்யாண், கொரோனாவால் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார். பவன் கல்யாணிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம், ராம் சரண் தொடர்ந்து விசாரித்து வருகிறார் என்கின்றனர் ராம் சரணுக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
கொரடலா சிவா டைரக்ட் செய்யும் ஆச்சார்யா படம் கிட்டதட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. ஆக்ஷன் காட்சிகள் சிலவும், ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்று மட்டும் தான் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று, இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா அதிகரித்து வருவதால் படப்பிடிப்பை நிறுத்த சிரஞ்சீவியும் ஓகே சொல்லி விட்டாராம். இதனால் மே மாதத்திற்கு பதிலாக படத்தின் ரிலீசை 2021 ம் ஆண்டின் பிற்பகுதிக்கு தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











