கெரியரின் உச்சத்தை விட்டுட்டு.. CM விஜய்க்கு வாழ்த்து சொன்ன ராம் சரண்.. மனசை தொட்டுட்டாறேப்பா!
சென்னை: நடிகர் ராம் சரண் நடித்து உருவாகி உள்ள படம் பெத்தி. வரும் ஜூன் 4ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது, படக்குழு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ராம் சரண் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறினார்.

அவர் கூறுகையில், “ தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சாருக்கு வாழ்த்துகள். கெரியரின் உச்சத்தில் இருந்து கொண்டு, அந்த ஸ்டார்டமை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களும் வாழ்த்துகள். திரைத்துறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசினார். ராம் சரண் இவ்வாறு பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications