என்னாது.. யூஸ்லெஸ் தில்ராஜுவா? வாரிசு தயாரிப்பாளரை வச்சு விளாசும் ராம்சரண் ரசிகர்கள்.. என்ன மேட்டர்?

சென்னை: பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவை சோஷியல் மீடியாவில் ராம் சரண் ரசிகர்கள் வச்சு விளாசி வருகின்றனர்.

#UselessDilRajuShamelessSVC எனும் ஹாஷ்டேக்கை பதிவிட்டு தில் ராஜுவை ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டு ராம் சரண் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய் நடித்து வம்சி இயக்கிய வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார். அதன் பின்னர் சமந்தா நடித்த சாகுந்தலம் படம் தில் ராஜுவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை இந்த ஆண்டு தேடித் தந்தது.

தில் ராஜுவை இப்படி அடிக்கணும்: ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆரை கட்டிவைத்து ராம் சரண் சவுக்காலே அடித்து தோலை உறிப்பது போல தில் ராஜுவை வெளுக்க வேண்டும் என ராம் சரண் ரசிகர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு திட்டி வருகின்றனர்.

இந்த அளவுக்கு ராம்சரண் ரசிகர்கள் டென்ஷன் ஆக காரணமே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம்சேஞ்சர் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருப்பது தான் காரணம் என்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில்: ராஜமெளலி படத்துக்கு பிறகு அடுத்தும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை மாற்றி மாற்றி இயக்கி வரும் ஷங்கர் இன்னமும் இரண்டு படங்களையும் முடித்து ரிலீஸுக்கு கொண்டு வரவில்லை.

இந்த ஆண்டு தீபாவளிக்காவது கேம் சேஞ்சர் படம் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எந்த அப்டேட்டும் கிடைக்காத நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜுவை துவைத்து எடுத்து வருகின்றனர்.

ராவணனான ஷங்கர்: மேலும், ஆதிபுருஷ் படத்தில் வரும் ராவணன் சீனில் ஷங்கர் உருவத்தை வைத்து எடிட் செய்து இயக்குநர் ஷங்கரையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சீக்கிரம் அப்டேட் கொடுங்க ஷங்கர், ஆர்ஆர்ஆர் ரிலீஸ் ஆகி ஒன்றரை வருடம் ஆகி விட்டது. இன்னமும் ராம்சரணின் படம் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Ram Charan fans slams Dil Raju with #UselessDilRajuShamelessSVC

அஜித் ரசிகர்களே பரவாயில்லை: #UselessDilRajuShamelessSVC என இந்த அளவுக்கு மோசமாக தயாரிப்பாளரை எந்தவொரு ரசிகர்களும் திட்டியிருக்கவே மாட்டார்கள். விடாமுயற்சி படத்தை இன்னும் ஆரம்பிக்காத லைகா நிறுவனத்தைக் கூட இப்படி அஜித் ரசிகர்கள் திட்டவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமீபத்தில் ராம் சரணுக்கும் அவரது மனைவி உபாசனாவிற்கும் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், ஷூட்டிங் பணிகளுக்கு லீவு போட்டு விட்டு குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார் ராம் சரண். இந்த ஆண்டு இறுதிக்குள் கேம் சேஞ்சர் வெளியாகுமா? அல்லது அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகுமா என்பது கேள்விக் குறியாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X