என்னது RRR 2 படத்தின் கதை இதுதானா? ஜூனியர் என்டிஆரை பங்கமாக கலாய்த்த ராம்சரண் ரசிகர்கள்!
ஹைதராபாத்: இந்த ஆண்டு வெளியான இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட திரைப்படமான ஆர்ஆர்ஆர் இந்தியாவை தாண்டி சர்வதேச ரசிகர்களாலும், இயக்குநர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படியொரு படத்தை மார்வெல் கூட கொடுக்கவில்லை என ஒவ்வொரு காட்சியிலும் கூஸ்பம்ப்ஸை உணர்ந்த வெளிநாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், டோலிவுட்டில் அதில், நடித்த ராம்சரண் பெரிய நடிகரா? இல்லை. ஜூனியர் என் டிஆர் பெரிய நடிகரா என்கிற போட்டியை வைத்து சண்டை போட்டு வருகின்றனர்.

ஆஸ்கர் கிடைக்குமா
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உயிரைக் கொடுத்து நடித்துள்ளனர். ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவுக்கு ஏகப்பட்ட உழைப்புகளை கொட்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார் ராஜமெளலி. இந்த ஆண்டு இந்த படத்தை இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆஸ்கர் கொடுக்க வேண்டும் என்றும் ஹாலிவுட் ரசிகர்களே வியந்து பாராட்டி வருகின்றனர்.

ராம்சரணுக்கு ஹாலிவுட் வாய்ப்பு
நெட்பிளிக்ஸில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் ட்வீட் போட்டு படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் ஈட்டிய கேஜிஎஃப் 2 படத்துக்கு கூட இப்படியொரு பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. மேலும், ராம்சரணின் நடிப்பை பார்த்து வியந்து போன சில இயக்குநர்களே ஹாலிவுட்டில் அவருக்காக கதை ரெடி பண்ணப் போகிறோம் என்றே ட்வீட் போட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் சண்டை
மார்வெல் படங்களில் கூட ஜூனியர் என்டிஆர் மிருகங்களுடன் குதிக்கும் அந்த இடைவேளை காட்சி போல ஒரு காட்சி இல்லை என்று உலகம் முழுவதும் ராம்சரணையும் ஜூனியர் என்டிஆரையும் பாராட்டி வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்கள் ராம்சரண் தான் பெஸ்ட் என்றும் ஜூனியர் என்டிஆர் இல்லை என்றால் படமே வேஸ்ட் என்றும் சண்டை போட்டு வருகின்றனர்.

RRR 2 கதை
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை இதுதான் என முதல் பாகத்தில் எனக்கு ராம் வேண்டும் என ஆலியா பட் கேட்க, ராமை பீம் மீட்டுக் கொண்டு வந்தார் என்றும், இரண்டாம் பாகத்தில் பீமின் ஜோடியும் தனக்கு ராம் வேண்டுமென கேட்க ஜோக்கராக பீம் மாறுவது தான் கதை என ராம்சரண் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

டிஸ்னி ஹாட்ஸ்டாரும் விடல
அண்ணா என ஜூனியர் என்டிஆர் பேசும் வசனங்களை மீம் டெம்பிளேட்டாக மாற்றி ஏகப்பட்ட ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நெட்பிளிக்ஸ், ஜீ5 ஓடிடி தளங்களை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது என்கிற அறிவிப்பையும் அதே டிரெண்டிங் டெம்பிளேட்டை போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்தின் ரீச் காரணமாக மூன்று பெரிய ஓடிடி தளங்கள் அந்த படத்தை வாங்கி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில், பல படங்கள் இதுபோல வெளியாகும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











