ராம்சரண், ஜூனியர் என்டிஆருக்கு ஹெல்மெட் போட்டுவிட்டு… அட்வைஸ் பண்ண காவல்துறை !

சென்னை : பாகுபலி படப்புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு நேற்று பகிர்ந்து இருந்தது.

அந்த போஸ்டரை பயன்படுத்தி அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர் வேடிக்கையான சாலை பாதுகாப்பு விளம்பரமாக மாற்றி உள்ளனர். வேடிக்கையான இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜூ மற்றும் கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் தொடங்கியது

கடந்தவாரம் தொடங்கியது

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது . இதனால், படக்குழு திட்டமிட்டப்படியே அக்டோபர் 13 அன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலியாபட்

அலியாபட்

இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் ராம்சரண் அல்லூரி சீதாராம ராஜூவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ஆலியாபட் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் இருவரது பாடல் காட்சிகள் ஜூலை மாதம் எடுக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் அது முடிவடைய உள்ளது.

புதிய போஸ்டர்

புதிய போஸ்டர்

இதையடுத்து, ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு நேற்று பகிர்ந்து இருந்தது. அந்த போஸ்டரில் ஜூனியர் என்டிஆர் பைக் ஓட்டுகிறார். அவரின் பின்னால் ராம்சரண் அமர்ந்து வருகிறார். இந்த போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே மிகவும் வைரலானது.

நம்பர் பிளெட் எங்கே

நம்பர் பிளெட் எங்கே

இந்நிலையில், வைரலான இந்த போஸ்டரை பார்த்த போக்குவரத்து காவல் துறையினர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக் ஓட்டுவது போல போஸ்டரை எடிட் செய்துள்ளனர். மேலும், நம்பர் பிளேட்இல்லை என்றும் அந்த எடிட் செய்த போஸ்டரில் பதிவிட்டுள்ளனர். ஆர்ஆர்ஆர் போஸ்டரை சாலை பாதுகாப்பு விளம்பரமாக மாற்றி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X