மார்ச் யஷ், ஏப்ரல் ராம்சரண்.. அப்போ ஜனநாயகன் எப்போ?.. பெத்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சென்னை: ராம் சரண் நடிக்கும் தெலுங்கு ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் படமான 'பெத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கூட, படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததால் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புச்சி பாபு சனா எழுதி இயக்கியுள்ள பெத்தி படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார். ராம் சரண், ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சிவா ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். ஏற்கனவே வெளியான பாடல் உலக அளவில் டிரெண்ட் ஆனது. ரத்னவேலு ஒளிப்பதிவு, நவீன் நூலி படத்திற்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

Ram Charan PEDDI Movie New Release DATE Locked Details Here

படத்தை மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டு புரோமோசன் பணிகளை படக்குழு தொடங்காததால், ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் பலருக்கும் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரசிகர்களும் திரையுலகமும் சந்தேகித்ததைப் போல, படம் மார்ச் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. மாறாக படத்தை ஏப்ரல் மாதத்தின் கடைசியில் அதாவது ஏப்ரல் மாதத்தில் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவிக் கொண்டுள்ளது. இந்த தகவலை கவனித்த தமிழ் சினிமா ரசிகர்களோ ஜன நாயகன் படத்துடன் இந்த தகவலை ஒப்பிட்டு வருகிறார்கள். அதாவது ஜன நாயகன் படம் ஜனவரி மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. மேலும் வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.

Ram Charan PEDDI Movie New Release DATE Locked Details Here

இதனால் படம் பிப்ரவரி மாதம் வெளியாகுமா? இல்லை மார்ச் மாதம் வெளியாகுமா என்ற கேள்விகள் இருந்து வருகிறது. எப்படியும் ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக யோசித்தே முடிவெடுக்கும் என்பதால் ஜன நாயகன் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலரையும் ஆட்கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X