கெத்து தினேஷூக்கே சவாலா.. ரியல் கேம் சேஞ்சர் இதானாம்.. தெறிக்க விடும் ராம் சரண் பெத்தி கெட்டப்!

சென்னை: கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பிறகு ராம் சரண் சவாலான கதாப்பாத்திரம் ஏற்று பெத்தி படத்தில் நடித்திருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. முன்னதாக படத்தின் டைட்டில் மோஷன் வீடியோ வெளியான நிலையில், ராம் சரண் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. கெத்து தினேஷை தூக்கி சாப்பிட்டார் என ரசிகர்கள் கருத்த தெரிவிக்கின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் ராம் சரண் சினிமா கரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதுவரை அவர் படத்திற்கு மிக மோசமான விமர்சனங்கள் வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. கதையின் போக்கும் ஷங்கர் படத்தில் பார்த்த காட்சிகளே திரும்ப பார்த்தது போன்ற உணர்வை தந்ததால் சளிப்பு தட்டியதாக ரசிகர்கள் தெரிவித்தனர். தயாரிப்பாளர் தில் ராஜூ கேம் சேஞ்சர் படத்தால் பெரிய நஷ்டத்தை சந்தித்தார். தெலுங்கு சினிமா உலகில் கேம் சேஞ்சர் போன்ற மோசமான படத்தை பார்த்ததில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே தியேட்டர்கள் காலியானதை பார்த்து ராம் சரண் அப்செட் ஆனார்.

ram-charan-peddi-movie-release-date-announced

கேம் சேஞ்சர் தோல்விக்கு பிறகு வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ராம் சரண் உப்பனா பட இயக்குநர் புச்சி பாபுவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேவரா படத்திற்கு பிறகு ஜான்வி கபூர் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தில் முதல் முறையாக ராம் சரணுடன் ஜான்வி கபூர் நடிக்கிறார். இயக்குநர் சுகுமாரின் உதவி இயக்குநரான புச்சி பாபு உப்பனா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆனார். உப்பனா படம் தெலுங்கு திரையுலகில் ஆணவக்கொலையை பற்றிய விவாதத்தை ஏற்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தியது. எதார்த்தமான படைப்பு என்றும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டி: இந்நிலையில், புச்சி பாபு - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் பெத்தி படத்தின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இப்படம் 2026 மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராம் சரண் நடிக்கும் 16ஆவது படம் என்பதால் அவரது ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் வீடியோவில் ராம் சரண் மூர்க்கத்தனமான கெட்டப்பில் கிரிக்கெட் பேட்டை கையில் சுழற்றி கிரிக்கெட் விளையாடுவது போன்று இருக்கிறது. உப்பனா படத்தை போன்று உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் படம் என கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தெலுங்கில் வந்த படங்கள் அரிது தான்.

ram-charan-peddi-movie-release-date-announced

லப்பர் பந்துக்கு போட்டியா: தமிழில் கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த கெத்து கதாப்பாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியால் அட்டகத்தி தினேஷ் கெத்து தினேஷாக மாறியுள்ளார். அந்தளவிற்கு கெத்து கதாப்பாத்திரத்தின் தாக்கம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அப்படமும் கிரிக்கெட்டை மையமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேபோன்று ராம் சரணும் கிரிக்கெட் மட்டையை சுழற்றி மைதானத்திற்குள் நிற்கிறார். மைதானம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் நிறைந்து காணப்படுகிறது. அப்போது பந்தை விரட்டி அடிக்கும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. பெத்தி படத்தின் ரிலீஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராம் சரண் கெத்து தினேஷை மிஞ்சிடுவார் போல என்று தெரிவித்துள்ளனர்.

நானியுடன் மோதலா?: கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து பெத்தி படம் உருவாகிறது என்பது படத்தின் வீடியோ மூலம் தெரிகிறது. ஆனால், லப்பர் பந்து படத்தின் ரீமேக்கா அல்லது படத்தின் கதை வேறா என்பது தெரியவில்லை. ராம் சரணின் கெட்டப் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறதாம். கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பிறகு ராம் சரண் சேஞ்ச் ஆகிவிட்டாராம். இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் பெத்தி படம் ரிலீக் ஆகும் மார்ச் 27ஆம் தேதி நானி நடித்திருக்கும் பாரடைஸ் படமும் ரிலீஸ் ஆகிறது. இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் பாக்ஸ் ஆஃபிஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X