பூஜா ஹெக்டேவை அலேக்காக தூக்கி சுற்றும் ராம்சரண்.. அந்த கடைசி சீன் வேறமாறி.. ஆச்சார்யா டீசர் ரிலீஸ்!

ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகன் ராம்சரண் இணைந்து நடிக்கும் ஆச்சார்யா படத்தின் சித்தா சாகா டீசர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

பாயும் புலி போல பாய்ந்து எதிரிகளை சம்ஹாரம் செய்யும் ராம்சரண் காட்சிகள் வெறித்தனம்.

ஹீரோயின் பூஜா ஹெக்டேவை அலேக்காக தூக்கி சுற்றும் அந்த ஒரு ரொமான்டிக் காட்சி ரசிகர்களை அட போட வைத்துள்ளது.

மெகா பட்ஜெட் நடிகர்

மெகா பட்ஜெட் நடிகர்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் டோலிவுட்டில் அடுத்த மெகா பட்ஜெட் நடிகராக மாறி உள்ளார். இயக்குநர் ராம்சரணின் மகதீரா படத்தை தொடர்ந்து மீண்டும் அவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம்சரண் நடித்துள்ள நிலையில், தந்தையுடன் அவர் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படமும் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. அடுத்த மெகா பட்ஜெட் படமாக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வருகிறார்.

பொங்கல் போட்டி

பொங்கல் போட்டி

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து ஜனவரி 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொங்கலுக்கு தல அஜித்தின் வலிமை படத்திற்கு கடுமையான போட்டியாக ஆர்.ஆர்.ஆர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சார்யா டீசர்

ஆச்சார்யா டீசர்

ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீசான அடுத்த மாதமே அப்பாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ராம்சரண். அடுத்த ஆண்டு டோலிவுட்டில் அடுத்தடுத்து ராம்சரணின் வசூல் வேட்டையாக இருக்கும் என்பதில் எந்தவொரு டவுட்டும் இல்லை. இந்நிலையில், தற்போது ஆச்சார்யா படத்தின் சித்தா சாகா டீசர் வெளியாகி உள்ளது.

Recommended Video

Prabhu Deva வுக்காக நான் எடுத்த சபதம் | Actress Samyuktha Hegde |Thael Audio Launch |Filmibeat Tamil
பூஜாவை அலேக்காக தூக்கி

பூஜாவை அலேக்காக தூக்கி

ஞாயிற்றுக்கிழமையான இன்று பூஜா ஹெக்டேவின் ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட்கள் குவிந்து வருகின்றன. பிரபாஸின் ராதே ஷ்யாம் பாடல் அப்டேட், பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு புகைப்படம் மற்றும் ஆச்சார்யா டீசர் என பூஜா ஹெக்டே ரவுண்டு கட்டி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அதிலும், ராம்சரண் பூஜா ஹெக்டேவை இந்த டீசரில் அப்படி அலேக்காக தூக்கி சுற்றுவதை வாய் பிளந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

சிறுத்தை சிரஞ்சீவி

டீசரின் கடைசி காட்சியில் சிறுத்தை ஒன்று தனது குட்டியை பாதுகாக்கும் காட்சியை காட்டிய இயக்குநர் அடுத்ததாக சிரஞ்சீவி மற்றும் ராம்சரணை காட்ட ரசிகர்கள் புல்லரித்து போய் விட்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு போட்டியாக இந்த படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X