ராம்சரண் மனைவியுடன் லாங் ட்ரைவ் போயிருக்கேன்.. அவதூறாக பேசிய இளைஞர்..தர்ம அடி கொடுத்த ரசிகர்கள்!

சென்னை : ராம்சரண் மனைவியுடன் லாங் ட்ரைவ் போயிருக்கேன் என்று அவதூறாக பேசிய இளைஞரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர் ராம்சரணின் ரசிகர்கள்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், ஆர்ஆர்.ஆர் படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தெரிந்த முகமாக மாறிவிட்டார்.

இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.

Ram Charans fans beating up a man over his demeaning comments for the wife Upasana

சிரஞ்சீவியின் மகன் : நடிகர் ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். முதல் படமே வெற்றி பெற்று, வசூலை வாரிக்குவித்தது. அதன் பின் ராஜமெளலி இயக்கிய மகதீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வாய்பிளந்து போனார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.

ராம் சரண் : அடுத்தடுத்து வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை கமர்ஷியல் வெற்றி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் ராம்சரண். மீண்டும் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

Ram Charans fans beating up a man over his demeaning comments for the wife Upasana

வளைகாப்பு : ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது அவர் தாய்மை அடைந்துள்ளார். கடந்த மாதம் உபாசனாவுக்கு வளைகாப்பு நடந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ராம்சரணின் மனைவியை வாழ்த்தினர்.

லாங் டிரைவ் சென்றேன் : இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனிசித், என்கிற நபர், ராம்சரணின் மனைவி உபாசானாவும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்றும், நானும் அவரும் கோவாவிற்கு லாங் டிரைவ் சென்று இருக்கிறோம் என்றார். மேலும், சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவுடன் ஊரி சுற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Ram Charans fans beating up a man over his demeaning comments for the wife Upasana

தாக்கிய ரசிகர்கள் : இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து டென்ஷனான ராம் சரணின் ரசிகர்கள் சுனிசித்தை கடுமையாக விமர்சித்து வந்தநிலையில், பொது இடத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி, இதுபோன்று இனிமேல் பேசக்கூடாது. நீங்கள் செய்திருப்பது முற்றிலும் தவறு என்பதால்தான் தாக்குதல் நடத்தியுள்ளோம். எந்தவொரு குடும்ப பெண்கள் பற்றியும் இதுபோன்று அவதூறு கருத்து பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X