For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு

|
CHIRANJEEVI SIR கூட நடிக்க பயமா இருந்துச்சு | ACTRESS TAMANNAH | SYERAA PRESSMEET | FILMIBEAT TAMIL

ஹைதராபாத்: தயாரிப்பாளர் ராம் சரணின் மனைவி உபாசனா, தமன்னா சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஒரு விலையுயர்ந்த வைர மோதிரம் ஒன்றினை அன்பளிப்பாக தமன்னாவிற்கு பரிசளித்துள்ளார். இதில் உள்ள ஆச்சரியமான விசயம், இந்த வைரம் தான் உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய வைரமாகும். இதன் மொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கருதப்படுகிறது.

ராம்சரண் தயாரிப்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி.. பீரியாடிக் திரைப்படமான இதில் இந்தியத் திரையுலகின் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Ram Charan’s Wife gifted 2 Crore worth Diamond Ring to Tamannaah

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கன்னட சினிமாவின் முன்னணி நாயகன் கிச்சா சுதீப், தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா, தமன்னா என பல நட்சத்திரங்களைக் கொண்டு சிறப்பாக இயக்கியுள்ளார் சுரேந்தர் ரெட்டி.

இப்படத்தில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக நடித்துள்ளார் சிரஞ்சீவி. அவரின் காதலியாக ஒரு நடன கலைஞராக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா. சில பல காரணங்களால் சிரஞ்சீவி சீத்தம்மா கதாபாத்திரமாக நடித்த நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறார்.

இப்படத்தில் தமன்னா மற்றும் நயன்தாரா இருவரும் சிறப்பாக நடித்திருந்தாலும் காதலியாக நடித்த தமன்னாவிற்கு தெலுங்கு திரையுலகில் மிக பெரிய அளவில் பாராட்டு கிடைத்துள்ளது.

தயாரிப்பாளர் ராம் சரணின் மனைவி உபாசனா, தமன்னா சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஒரு விலையுயர்ந்த வைர மோதிரம் ஒன்றினை அன்பளிப்பாக தமன்னாவிற்கு பரிசளித்துள்ளார். இதில் உள்ள ஆச்சரியமான விசயம், இந்த வைரம் தான் உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய வைரமாகும். இதன் மொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்வு தம்மன்னாவை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை நிச்சயமாக ஒரு பொக்கிஷமாக அவர் வாழ்நாள் முழுவதும் அதை பாதுகாப்பார் என்று தெலுங்கு படவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உனக்கு சீரியஸ் பிராப்ளம் இருக்கு.. டாக்டர்கிட்ட போ.. மீராவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த இயக்குநர்!

தமன்னாவிற்கு ராம் சரண் மனைவி உபாசனா அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை அணிந்தபடி புகைப்படங்கள் எடுத்து தனது சமூகவலைதள பக்கங்களில் பெருமையாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது.

மேலும் சைரா திரைப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக சிறப்பாக நடித்த நயன்தாராவிற்கு எந்த ஒரு பரிசும் கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் நயன் தரவின் ரசிகர்கள்.

English summary
Upasana, wife of producer Ram Charan, has been awarded an expensive diamond ring to Tamannaah for her performance in ‘Sye Raa Narasimha Reddy’. Surprisingly, this diamond is the 5th largest diamond in the world. The total value is around Rs 2 crore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more