பிரபாஸ் திருமணம்.. மணமகள் இந்த ஊர்தான்.. ராம்சரண் சொன்ன டாப் சீக்ரெட்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக இருக்கிறார் அவர். கடைசியாக அவர் நடித்த கல்கி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் நீண்ட காலமாக இருக்கிறது. இந்தச் சூழலில் நடிகர் ராம்சரண் அதுகுறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக கல்கி படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

ram charan prabhas game changer

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால்; இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரபாஸ். படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது. மேலும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பான் இந்தியா ஸ்டார்களையும் இந்தப் படத்தில் கமிட் செய்தார்கள் படக்குழுவினர். ஆனால் படம் படுதோல்வியையே சந்தித்தது.

அனுஷ்காவுடன் காதல்: இதற்கிடையே பாகுபலி, பில்லா தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களில் பிரபாஸும் அனுஷ்காவும் இணைந்து நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்ததாகவும்; இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. மேலும் சில காரணங்களால் இருவருக்குமான காதல் பாதியில் முடிவடைந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார்கள்.

திருமணத்துக்கு நோ: சூழல் இப்படி இருக்க இந்தக் காதல் முறிவால்தான் இரண்டு பேருமே இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற பரவலான பேச்சும் டோலிவுட்டில் இருந்தது. ஆனால் திருமணத்துக்கு பிரபாஸ் நோ சொல்ல காரணம் குறித்து சமீபத்தில் அவரது தாய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் பேசுகையில், பிரபாஸின் நெருங்கிய நண்பரின் திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை. அதன் காரணமாகத்தான் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

ராம்சரண் சொன்ன சீக்ரெட்: அதேசமயம் பிரபாஸின் சித்தி ஒரு பேட்டியில் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கூறியிருந்தார். இதனை கேட்ட பிரபாஸின் ரசிகர்கள், மணப்பெண் யாராக இருப்பார் என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ஹீரோ ராம்சரண் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பாலைய்யா, பிரபாஸ் திருமணம் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் என்று கேள்வியை முன்வைத்தார்.

யார் பெண்?: அதற்கு பதிலளித்த ராம்சரண், "நடிகர் பிரபாஸ் மிக விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண் ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில் இருக்கும் கானபவரம் என்கிற ஊரை சேர்ந்தவராக இருப்பார்" என்றார். இதனை பார்த்த ரெபல் ஸ்டாரின் ரசிகர்களோ, அப்போ பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதியாகிவிட்டதாக மகிழ்ச்சியோடு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X