குழந்தை இல்லாததால் கேள்விக்குள்ளாகும் ஆர்ஆர்ஆர்.. என்ன இப்படி சொல்லியிருக்காங்க ராம்சரண் மனைவி!

ஐதராபாத் : நடிகர் ராம்சரண் சிரஞ்சீவியின் மகன். பல சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவருக்கு உபாசனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

நடிகர் ராம்சரண்

நடிகர் ராம்சரண்

சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக மாறியுள்ளார். இவரது மாவீரன் படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. சிறப்பான இவரது பாடி லாங்குவேஜ் காரணமாக இவர் தற்போது டோலிவுட்டின் ரசிகர்களின் பேவரிட் ஹீரோவாக உள்ளார்.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் இவரது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் சீதாராம ராஜு என்ற போலீஸ் அதிகாரியாக ராம்சரண் நடித்திருந்தார். ஜூனியர் என்டிஆருடன் ராம்சரண் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களின் பேவரிட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

பான் இந்தியா நாயகன்

பான் இந்தியா நாயகன்

இந்தப் படம் மூலம் ராம்சரண் பான் இந்தியா நாயகனாக மாறியுள்ளார். தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்துவரும் இவர் தயாரிப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் இவரது தயாரிப்பு + நடிப்பில் வெளியான சிரஞ்சீவியின் ஆச்சார்யா எதிர்பார்த்தபடி கைக்கொடுக்கவில்லை.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்

இந்நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டங்களின் இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் கால் பதித்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஆர்சி15 என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதிகாரி டைட்டில்

அதிகாரி டைட்டில்

ஆனால் படத்திற்கு அதிகாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் ராம்சரணுக்கு கியாரா அத்வானி ஜோடியாகியுள்ளார். படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பரில் நிறைவடையும் சூட்டிங்

டிசம்பரில் நிறைவடையும் சூட்டிங்

தற்போது படத்தின் 60 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய 10 ஆண்டு திருமண பந்தத்தை கொண்டாடி மகிழ்ந்தார் ராம் சரண். தன்னுடைய காதல் மனைவி உபாசனா குறித்து அவர் உற்சாகமாக ட்வீட் செய்திருந்தார்.

ராம்சரண் மனைவி

ராம்சரண் மனைவி

திருமணமாகி 10 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவர்கள் குழந்தை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இந்நிலையில் ராம்சரணின் மனைவி சமீபத்தில் சத்குருவை சந்தித்து மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டே தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கேள்விக்குள்ளாகும் ஆர்ஆர்ஆர்

கேள்விக்குள்ளாகும் ஆர்ஆர்ஆர்

இதனால் தங்களது ஆர்ஆர்ஆர் (relationship, reproduction and role in life) குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் உபாசனா கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சத்குரு, இனப்பெருக்கம் செய்யாத பெண்களைப் பார்ப்பது நல்லது என்று கூறியுள்ளார். மனிதனின் கால்தடம் குறைந்தால் புவி வெப்பமடைதல் பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் உபாசனாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X