Ram Charan: ராம் சரண் மனைவி போல சாதாரண பெண்களும் கருமுட்டையை உறைய வைக்க முடியுமா? எவ்வளவு செலவாகும்?

ஹைதராபாத்: 18 வயது முதல் 25 வயதுக்குள் பெண்கள் தங்கள் கருமுட்டையை மருத்துவ முறைப்படி உறைய வைத்து சேமித்து வைக்க முடியும். ஆனால், அதற்கு சில லட்சங்கள் செலவாகும் என்கின்றனர்.

நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா திருமணம் முடிந்த கையோடு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் திருமண வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டும் என்றும் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவை எடுத்து தனது கணவரிடமும் தெரிவித்துள்ளார்.

Ram Charan wife Upasana undergoes Egg Freezing, here we look about the cost and process

மனைவியின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் ராம் சரண் பொறுமையாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்த நிலையில், 11 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கருமுட்டையை மருத்துவ ரீதியாக சேமித்து வைக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

கருமுட்டையை யார் உறைய வைக்கலாம்: புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் கீமோ தெரபி உள்ளிட்டவற்றை செய்யும் போது அவர்களின் கருமுட்டை முற்றிலுமாக பாதிக்கப்படும் என்கின்றனர். அதன் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் 18 முதல் 25 வயதில் கருமுட்டையை ஃப்ரீஸ் செய்து பத்திரப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனால், சமீப காலமாக வேலைக்கு செல்லும் பெண்கள், சினிமா நடிகைகள், பொருளாதாரத்தில் மேம்பட நினைப்பவர்கள் என பலரும் இந்த முறையை கையாண்டு வருகின்றனர். 18 முதல் 25 வயதுக்குள் கருமுட்டையை சேமித்து வைத்தால் 90 முதல் 98 சதவீதம் வரை குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Ram Charan wife Upasana undergoes Egg Freezing, here we look about the cost and process

பெண்கள் எப்போது அம்மாவாகலாம் என்கிற முடிவை சுதந்திரமாக அவர்களே எடுக்க உதவுகிறது இந்த கருமுட்டையை சேமிக்கும் முறை.

எப்படி பாதுகாக்கின்றனர்: வேலை காரணமாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ தாமதமாக குழந்தையை பெற்றுக் கொள்ள நினைக்கும் தம்பதியினர் ஆனால், வயது அதிகரிப்பதன் காரணமாக வளமான கருமுட்டைகள் இல்லாமல் குறைந்து போய் விடுவதால் குழந்தையின்மை பிரச்சனை உருவாகி வருகிறது.

அதனை கட்டுப்படுத்தவே இப்படியொரு முறையை உருவாக்கி உள்ளனர். ஆரோக்கியமாக இருக்கும் போதே இளம் வயதிலேயே அதை பத்திரப்படுத்தி வைத்து விட்டு, தேவையான நேரத்தில் ஐவிஎஃப் தொழில்நுட்பத்தில் செயற்கை முறையில் கருதரித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், அதற்கு டெஸ்டிங், ஓவரின் ஸ்டிமுலேஷன், கருவை உடலில் இருந்து எடுப்பது, பின்னர் அதனை உறைய வைத்து சில வருடங்கள் பாதுகாத்து வைப்பது போன்றவற்றின் மூலம் பாதுகாத்து வருகின்றனர்.

Ram Charan wife Upasana undergoes Egg Freezing, here we look about the cost and process

எவ்வளவு செலவாகும்: ஆரம்பத்தில் பரிசோதனை முதல் கருமுட்டையை எடுத்து உறைய வைத்து பாதுகாப்பது வரை 2 முதல் 2.5 லட்சம் வரை செலவாகும் என்கின்றனர். மேலும், அந்த கருமுட்டையை பாதுகாக்க ஆண்டுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகும் என்கின்றனர்.

10 ஆண்டுகள் ராம்சரண் மனைவி உபாசனா தனது கருமுட்டையை உறையவைத்து சேமித்து வைத்துள்ள நிலையில், சுமார் 15 முதல் 20 லட்சம் வரை செலவு செய்திருப்பார் என்கின்றனர். விருப்பம் போல குழந்தையை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் இந்த முறையை சில லட்சங்கள் செலவு செய்து செய்ய வேண்டிய நிலை உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X