Game Changer BO: ஜூனியர் என்டிஆரின் தேவரா முதல் நாள் வசூலை முறியடித்த ராம் சரணின் கேம் சேஞ்சர்!
சென்னை: எப்படியும் தில் ராஜு ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூலை கொஞ்சம் உயர்த்தித் தான் சொல்வார் என நேற்றே கணித்த நிலையில், ஆந்திராவே ஆடும் அளவுக்கு முதல் நாள் வசூல் அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டு ராம் சரண் ரசிகர்களை சந்தோஷத்தின் வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலையிலேயே வெளியிட்டு ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்கும் முயற்சியை படக்குழு செய்துள்ளது.

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தின் முதல் நாள் வசூலை அசால்ட்டாக ராம் சரணின் கேம் சேஞ்சர் முறியடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.
கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல்: ராம் சரண் சோலோவாக நடித்த படங்களில் இதுவரை அதிகபட்சமாக ரங்கஸ்தலம் திரைப்படம் தான் 216 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் அவர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்தது. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் டபுள் ஆக்ஷனில் நடித்து அசத்தியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 186 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
186 கோடியா?: ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தின் லைஃப் டைம் வசூலே இப்படி இல்லையே என்றும் முதல் நாளிலேயே 186 கோடி ரூபாய் வசூலை கேம் சேஞ்சர் பெற்றுள்ளது உண்மை தானா? அல்லது வாரிசு படத்துக்கு வசூல் கணக்கை அளந்து விட்டு சமீபத்தில் அந்த படம் நஷ்டத்தை கொடுத்ததாக தில் ராஜு பேசியதை போல அடுத்த படத்தின் ரிலீஸின் போது புலம்புவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேவரா சாதனை முறியடிப்பு: ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான தேவரா படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி என இதே போல போஸ்டர் வெளியிட்டனர். ஆனால், ஒட்டுமொத்த வசூலே 400 கோடி தான் வந்தது. படம் லாபத்தை தரவில்லை என்றும் ஜூனியர் என்டிஆர் புலம்பியதையும் அதன் பின்னர் பார்க்க முடிந்தது. கேம் சேஞ்சர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், எப்படியும் வசூல் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் தில் ராஜு இந்த நம்பர்ஸ் கேம் ஆடுகிறாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











