இதுக்கு இந்தியன் 2வே பெட்டர்.. லாஜிக்கே இல்லை.. ஷங்கரின் கேம் சேஞ்சர் ஹெலிகாப்டர் சீன் ட்ரோல்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அதுவும் குறிப்பாக டோலிவுட் படங்கள் என்றால் லாஜிக் இல்லாத மேஜிக் தான் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகும் என அவர்களே பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கிராவிட்டி என அனைத்துக்கும் எதிரான காட்சிகளை ஸ்டன்ட் கலைஞர்களுடன் பெரும் உதவியுடன் எடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த கொடுத்தால் அதையும் இப்படி ட்ரோல் பண்ணா என்ன சார் நியாயம்.
ஒரு நாள் முதல்வர், லஞ்சம் வாங்கினால் கொலை செய்யும் தாத்தா, அம்பி அந்நியனாக மாறுவது என ஒவ்வொரு படங்களிலும் சவாலான கதையை திரைக்கதையாக மாற்றி அதை தனது ஸ்டைலில் பிரம்மாண்டமாக காட்சி படுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

அவருடைய இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கேம் சேஞ்சர் படத்தின் இன்ட்ரோ காட்சியை தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர்.
ரசிகர்கள் சண்டை: ஒரு படம் வெளியான உடனே காலையிலேயே அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவிட்டியை பரப்ப ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. அதே போல, அந்த படத்தை காப்பாற்ற அந்த நடிகரின் படையும் ஆன்லைனில் சண்டை செய்து வருவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இங்கே எப்படி விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை நடைபெறுகிறதோ அதே போல டோலிவுட்டில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மத்தியில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இதுக்கு இந்தியன் 2வே பெட்டர்: ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. இந்நிலையில், ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என ராம் சரண் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இதுக்கு இந்தியன் 2 படமே பெட்டர். ஆரம்பக் காட்சியிலேயே லாஜிக் எத்தனை கிலோ எனக் கேட்கும் அளவுக்கு ஷங்கர் இப்படியொரு சீனை எடுத்து வைத்துள்ளாரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஹெலிகாப்டர் சீன்: ரயில் தண்டவாளத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கும் ஆட்களை ஹெலிகாப்டரில் வந்தபடியே நடிகர் ராம் சரண் தனது வாள் கொண்டு அந்த கட்டுக்களை அறுத்தெடுத்து ரயில் வந்து அவர்களை நசுக்குவதற்கு முன்பாக காப்பாற்றும் அறிமுக காட்சி வீடியோவை தியேட்டரில் இருந்து சுட்டு சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
புஷ்பா 2, தேவரா பார்க்கலையா?: ராம் சரணின் ஹெலிகாப்டர் இன்ட்ரோ சீன் நல்லாத்தான் இருக்கு என்றும் புஷ்பா 2 படத்தில் வரும் அந்த இலங்கைக்கு போட்டில் செல்லும் காட்சி, கடைசியில் கிளைமேக்ஸில் ரோப் கட்டிக் கொண்டு அந்தரத்திலேயே ஃபைட் செய்யும் அல்லு அர்ஜுன் சண்டை எல்லாம் பார்க்கலையா? தேவரா படத்தில் தனி ஒருவராக கன்டெய்னரையே அட்டை பெட்டியை தள்ளிக் கொண்டு போவது போல ஜூனியர் என்டிஆர் 10 ஆட்களுடன் சேர்த்துக் கொண்டு தள்ளும் காட்சி எல்லாம் எந்த ஊரு லாஜிக் என ராம் சரண் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர். ஆச்சார்யா படத்தை விட கேம் சேஞ்சர் படம் தரமாக உள்ளது என்றும் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி உறுதி என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications