Box office : 3 நாளில் ரூ 236 கோடி.. வசூலில் மிரட்டும் ராம் சரணின் 'பெத்தி‘ அதிகாரப்பூர்வ வசூல்!
சென்னை: ஆர்.ஆர்.ஆர், ஆச்சார்யா, கேம் சேஞ்சர் என அடுத்தடுத்து சறுக்கல்களைச் சந்தித்து வந்த ராம் சரணுக்கு, இந்த 'பெத்தி' படத்தின் வெற்றி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தியேட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிரட்டி வருகிறது.
3 நாள் வசூல்: பெத்தி படம் ரிலீசான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் ₹51 கோடி வசூல் செய்து. முதல் இரண்டு நாட்களிலேயே உலகளவில் ₹150 கோடியைத் தாண்டியது. தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலின்படி, படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ₹236.7 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், பெத்தி படம் வெளியான ஆரம்பத்தில் இருந்த வேகம் லேசாகக் குறையத் தொடங்கியதை நேற்றை வசூல் காட்டி உள்ளது. சாக்னில்க் தகவல்படி, 3வது நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்த போதும் இந்தியாவில் ₹28.85 கோடியை மட்டுமே வசூலித்தது. இதன் மூலம் இந்தியாவில் ₹125.25 கோடி வசூலித்துள்ளது.

ஜான்வி கபூர் சர்ச்சை: படம் ஒரு பக்கம் வசூலில் மிரட்டினாலும், மறுபக்கம் ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஜான்வி கபூர் சில காட்சிகளில் மிகவும் கவர்ச்சியாக, முகம் சுளிக்கும் அளவில் நடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், ரசிகர்களின் கருத்துக்களைப் பரிசீலித்த பிறகு, சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்கவும், மாற்றவும் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தியேட்டர்களில் அந்தக் காட்சிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
ராம் சரணுக்கு கைகொடுக்குமா? ₹450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'கேம் சேஞ்சர்' படுதோல்வியை சந்தித்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதே போல பெத்தி படமும் ₹350 கோடி எடுக்கப்பட்டு இருப்பதால், ராம் சரணுக்கு பெத்தி படம் கம்-பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்திரைப்படத்தில் ரவி கிஷன், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு எனப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications