Peddi Box Office: அந்த சர்ச்சை.. திடீரென தியேட்டர் விசிட் அடித்த ராம்சரண்.. பெத்தி 4 நாள் வசூல்!
சென்னை: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான பெத்தி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஜான்வி கபூரை ரொம்பவே ஆபாசமாக சித்தரித்துள்ளார்கள் என வெடித்த சர்ச்சை காரணமாக படத்தின் வசூல் வேகம் திடீரென குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஞாயிறன்று திடீரென தியேட்டருக்கு ராம்சரண் விசிட் அடிக்க ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளே உலகளவில் 223 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், அதன் பின்னர் ராம் சரண் நடித்த ஆச்சார்யா, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

பெத்தி திரைப்படம் ராம் சரணுக்கு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் படமாக அமையும் என பாராட்டுக்கள் குவிந்த நிலையில், திடீரென படத்துக்கு மிகப்பெரிய அவப்பெயராகவும் பலவீனமாகவும் ஜான்வி கபூரின் சில சர்ச்சை காட்சிகள் தீயாக பரவி பஞ்சாயத்தை கிளப்ப வசூலில் அதன் தாக்கம் பெரியளவில் தெரியத் தொடங்கிவிட்டது.
ஜான்வி கபூர் அமைதி: பெத்தி இயக்குநர் புச்சி பாபு சனா மன்னிப்புக் கேட்ட பின்னரும் ஜான்வி கபூர் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல் போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளார். நித்யா மேனன் முதல் டிம்பிள் ஹயாதி என ஏகப்பட்ட நடிகைகள் இந்த பஞ்சாயத்தை பேசி வரும் நிலையில், ஜான்வி கபூர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருப்பது படக்குழுவை அப்செட் ஆக்கியுள்ளது. ஏற்கனவே படத்தில் ஜான்வி கபூரின் காட்சிகள் குறைவு தான். இந்நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நேற்று மாலை முதல் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தி நடிகைகளுக்கு அவமானம்: ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட் நடித்த நிலையில், அவருக்கு சரியான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை என பஞ்சாயத்து வெடித்தது. கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானியையும் வீணடித்து விட்டனர் என்றனர். தேவரா மற்றும் பெத்தி படங்களில் வெறும் கவர்ச்சி பொம்மையாகவே ஜான்வி கபூரை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தொடர்ந்து டோலிவுட்டில் பாலிவுட் நடிகைகளை அவமானப்படுத்தி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் வெடித்துள்ளன.
தியேட்டர் விசிட் அடித்த ராம் சரண்: பெத்தி படத்திற்கு எதிராக நாடு முழுவதும் கிளம்பிய சர்ச்சை காரணமாக பான் இந்தியா அளவிலும் ஓவர்சீஸிலும் வசூல் அதிரடியாக குறையத் தொடங்கிய நிலையில், ராம் சரண் தியேட்டருக்குச் சென்று பெத்தி படத்தை பார்த்து, அதன் கிளைமேக்ஸ் காட்சிகளை ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
4 நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்: ஜூன் 4ம் தேதி வெளியான பெத்தி திரைப்படம் வியாழன் முதல் ஞாயிறு வரை என மொத்தம் 4 நாட்களில் இதுவரை இந்தியாவில் 187 கோடி ரூபாயும் உலகளவில் 233 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 3 நாட்களில் பெத்தி திரைப்படம் அதிகபட்சமாக 236 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படம் திங்கட்கிழமையான இன்றும் அதிக வசூலை ஈட்டி வார நாட்களிலும் கல்லா கட்டினால் தான் வெற்றியை பதிவு செய்யும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications