விலை உயர்ந்த வைரத்தை தமன்னாவுக்கு பரிசாக கொடுத்த.. ராம் சரணின் மனைவி..ஏன் தெரியுமா?

சென்னை: விலை உயர்ந்த வைரத்தை நடிகை தமன்னாவுக்கு ராம் சரணின் மனைவி உபாசனா பரிசாக கொடுத்துள்ளார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார்.

இதையடுத்து கொஞ்ச காலம் தமிழ் சினிமாவில் தென்படாமல் இருந்த தமன்னா, பாகுபலி படத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

Ram Charans wife, Upasana Kamineni gifted diamond ring to Tamannaah Bhatia

நடிகை தமன்னா: ஓரளவுக்கு கவர்ச்சி காட்டி வந்த தமன்னா 'ஜீ கர்தா' என்ற வெப் தொடரிலும், லஸ் ஸ்டோரீசிலும் ஓவராக கவர்ச்சி காட்டி சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக மாறினார். எந்த சூழ்நிலையிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வந்த தமன்னா, தாராளமாக படுக்கை அறை காட்சியில் நடித்தது மிகப்பெரிய அளவில் பேசு பொருள் ஆனது.

கவர்ச்சி ஆட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னாவின் இந்த அதிரடியான கவர்ச்சி படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிடும் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், அண்மையில் தமன்னா இறங்கி குத்தாட்டம் போட்ட பாடல் வெளியானது. இந்த பாடலிலும் தாராளமாக கவர்ச்சி காட்சி ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

Ram Charans wife, Upasana Kamineni gifted diamond ring to Tamannaah Bhatia

விலை மதிப்புள்ள வைரம்: இந்நிலையில், நடிகை தமன்னா உலகின் ஐந்தாவது பெரிய வைரத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு மட்டும் ரூ.2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த வைரத்தை, சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனா தமன்னாவிற்கு பரிசாக கொடுத்துள்ளார்.

இதுதான் காரணமா: சிரஞ்சீவியின் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த சைரா நரசிம்மா ரெட்டி படத்தில், நடிகை தமன்னா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வரலாற்று பின்னணி கொண்ட இந்த படத்தை உபாசனா தயாரித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உபாசனா தமன்னாவுக்கு இந்த விலையுயர்ந்த வைரத்தை பரிசாக கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X