twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் சர்ச்சையில் ராம்கோபால் வர்மா: ஸ்ரீதேவி நோட்டீஸ்

    By Mayura Akilan
    |

    மும்பை: கிளுகிளுப்பான சினிமாவிற்கு ஸ்ரீதேவி என்று பெயர் வைத்த ராம் கோபால் வர்மாவுக்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா. அடுத்து ‘சாவித்ரி‘ என்ற படத்தை தெலுங்கு மொழியில் இயக்கி இருக்கிறார்.

    ஆசிரியை மீது சிறுவன் ஒருவன் காமம்கொள்வதுபோல் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தி வர்மாவின் கொடும்பாவியும் எரித்தனர்.

    மனித உரிமைக்கமிஷன் நோட்டீஸ்

    மனித உரிமைக்கமிஷன் நோட்டீஸ்

    சிறுவர்களின் மனதை கெடுக்கும் வகையில் இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரையடுத்து வர்மாவுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

    மாறிய தலைப்பு

    மாறிய தலைப்பு

    இந்நிலையில் ‘சாவித்ரி‘ டைட்டிலுக்கு அனுமதி கிடைக்காததால் ‘ஸ்ரீதேவி‘ என படத்துக்கு தலைப்பை மாற்றினார்.

    ஸ்ரீதேவி அதிர்ச்சி

    ஸ்ரீதேவி அதிர்ச்சி

    இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஸ்ரீதேவி,இதுகுறித்து கணவர் போனிகபூரிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு போனிகபூர், ராம் கோபால் வர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட தலைப்பை மாற்றும்படி கூறினார்.

    போனிகபூர் நோட்டீஸ்

    போனிகபூர் நோட்டீஸ்

    ராம்கோபால் வர்மா இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவருக்கு ஸ்ரீதேவி சார்பில் போனிகபூர் நோட்டீஸ் அனுப்பினார்.

    மனைவி பெயர் வைப்பதா?

    மனைவி பெயர் வைப்பதா?

    இதுபற்றி போனிகபூர் கூறும்போது,‘வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான். தவறான கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு படத்துக்கு என் மனைவி (ஸ்ரீதேவி) பெயரை வைத்ததை ஏற்க முடியாது‘ என்றார்.

    English summary
    Ram Gopal Varma is in the news again for the wrong reasons.A livid Boney Kapoor has sent him a legal notice after RGV rechristened his upcoming Telugu film Sridevi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X