'எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும்..' சர்ச்சை இயக்குனரின் அடுத்த அதிரடி.. சசிகலா பெயரில் சினிமா!
சென்னை: சசிகலா என்ற பெயரில் படம் எடுக்கப்போவதாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
Recommended Video
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் இயக்குபவர், இயக்குனர் ராம் கோபால் வர்மா.
கொரோனா லாக்டவுனிலும் நேக்கட், க்ளைமாக்ஸ் ஆகிய கிளுகிளு படங்களை இயக்கி, தான் தொடங்கியுள்ள ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தார்.

உண்மைச் சம்பவம்
அடுத்து 'த்ரில்லர்' என்ற படத்தை இயக்கினார். இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி பற்றியும் படம் இயக்கப் போவதாகக் கூறியிருந்தார். அதற்கு முன், மர்டர் என்ற படத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்தக் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

சர்ச்சை கருத்து
சோசியல் மீடியாவில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புபவர் இவர். இதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வார். இவர் இப்போது, 'சசிகலா' என்கிற பெயரில் படம் இயக்கப் போவதாக புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

எஸ் என்கிற பெண்
தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா புகைப்படங்களை பதிவிட்டு, 'சசிகலா என்ற படத்தை இயக்க இருக்கிறேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் இந்தப்படம் வெளியாகும்.
சதிகள் நிறைந்த
அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும். லக்ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தயாரிக்கிறார். இந்தப் படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த சிக்கலான, சதிகள் நிறைந்த உறவைப் பற்றியக் கதை.

கொல்ல முடியும்
நெருக்கமாக இருக்கும்போதுதான் எளிதாக கொல்ல முடியும் என்பது தமிழ் பழமொழி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











