சர்ச்சை இயக்குனர் அடுத்த அட்டாக்..முதல் லெஸ்பியன் கிரைமாம்.. மிரட்டும் போஸ்டர்.. விளாசும் ஃபேன்ஸ்
சென்னை: பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த பட போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இயக்குனர் ராம் கோபால் வர்மா, இந்த கொரோனா லாக்டவுன் காலத்தையும் விட்டு வைக்கவில்லை.
பலர் கொரோனா பீதியில் படங்களின் ஷூட்டிங்கை தொடங்காமல் இருக்க, இந்த நேரத்திலும் படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார் அவர்.

சர்ச்சை இயக்குனர்
இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சை இயக்குனர் என்பார்கள். ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் அவர். லாக்டவுனில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.

பயங்கர கிளாமர்
கடுமையான விமர்சனங்களையும் வைத்தனர். ஆனால், எதையும் கண்டு கொள்ளவில்லை ராம் கோபால் வர்மா. சத்தம் போடாமல் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். அந்த படத்தின் ஹீரோயின் படு பயங்கர கிளாமராக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்திலும் பலான காட்சிகள் பல இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆபாசமாகவே
இந்நிலையில் தனது படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்தார் ராம் கோபால் வர்மா. ஒடிசாவை சேர்ந்த ராக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞரும் ஹீரோயினும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையும் ரசிகர்கள் கண்டபடி விளாசினர். ஒரு காலத்தில் சிறந்த படங்களை இயக்கி வந்த அவர், இப்போது இயக்கும் படங்கள் ஆபாசமாகவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

நடிகை அப்சரா ராணி
இந்நிலையில் அவர் அடுத்து டேஞ்சரஸ் (Dangerous) என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது லெஸ்பியன் பற்றிய கதை. கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை அடுத்து, முதல் முறையாக அவர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறதாம். இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி இருவரும் லெஸ்பியனாக நடித்துள்ளனர்.

கிரைம் ஆக்ஷன்
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. அந்த போஸ்டரில் அப்சராவும் ரூபாவும் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனர். முதல் இந்திய லெஸ்பியன் கிரைம் ஆக்ஷன் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். டைட்டிலுக்கு கீழே, அவர்கள் காதல், ரவுடிகள் போலீஸ் உட்பட பலரை கொன்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.

மிகுந்த மரியாதையுடன்
போஸ்டரை வெளியிட்டு ட்வீட் செய்துள்ள ராம் கோபால் வர்மா, இரண்டு பெண்களுக்கு இடையிலான காதல் கதையை மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலைப் போலவே சித்தரிக்க வேண்டும் என்பது என் நோக்கம். தற்செயலாக அதன் போஸ்டர் திறமையானவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளார்.

கடுமையான எதிர்ப்பு
வழக்கம் போலவே இந்த போஸ்டருக்கும் பலர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சிலர், இதுபோன்ற படங்களை எடுத்து நமது கலாச்சாரத்தையும் குழந்தைகளையும் அழித்துவிடாதீர்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர். சிலர். ஆண் பெண் காதலை விட, பெண்களின் காதல் சக்தி வாய்ந்தது என்று நம்புகிறேன். அதை கண்ணியமாக சித்தரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











