'ஆபாசப் பட நடிகையா..? தன் திறமையை நிரூபித்தவர்' நடிகை ஊர்மிளாவுக்கு சர்ச்சை இயக்குனர் ஆதரவு!

By

சென்னை: 'ஆபாசப் பட நடிகை' என்று நடிகை கங்கனா கூறிய விவகாரத்தில் நடிகை ஊர்மிளாவுக்கு ஆதரவாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, பாலிவுட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்மிளா மடோன்கர்

ஊர்மிளா மடோன்கர்

மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி கூறிய நடிகை கங்கனா ரனவத் பாலிவுட்டில் போதை மாஃபியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்றார். கங்கனாவின் இந்தப் புகாருக்கு நடிகை ஊர்மிளா மடோன்கர் பதில் அளித்திருந்தார். இவர் தமிழில் கமலின் இந்தியன் படத்தில் நடித்திருந்தார்.

கங்கனாவுக்கு தெரியுமா?

கங்கனாவுக்கு தெரியுமா?

ஊர்மிளா கூறும்போது, 'போதைப் பொருள் அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருக்கிறது. இமாச்சல பிரதேசம்தான் இதன் தாய்வீடு என்பது நடிகை கங்கனாவுக்கு தெரியுமா? முதலில் உங்கள் ஊரில் இருக்கும் போதை மருந்துப் பிரச்னையை ஒழித்துவிட்டு பாலிவுட்டைப் பற்றிப் பேசுங்கள் என்று ஊர்மிளா தெரிவித்திருந்தார்.

ஆபாசப் பட நடிகை

ஆபாசப் பட நடிகை

இதுகுறித்து கங்கனா கூறும்போது, 'ஊர்மிளா எனது போராட்டங்களை கேலிக்குரியதாக ஆக்குகிறார். அவர் ஆபாசப் பட நடிகை' என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நடிகை கங்கனாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். நடிகை ஊர்மிளாவுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தனர்.

ஸ்வரா பாஸ்கர்

ஸ்வரா பாஸ்கர்

'மஸூம், சமத்கார், ரங்கீலா, ஜுடாய், தவுட், சத்யா, பூத், கவுன், ப்யார் உள்ளிட்ட படங்களில் உங்கள் அற்புதமான நடிப்பை நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் நடிப்பையும், நடனத்தையும் கண்டு வியந்திருக்கிறேன்' என்று ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் அனுபவ் சின்ஹாவும் அவரை பாராட்டி கூறியிருந்தார்.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

இந்நிலையில் ஊர்மிளாவை, ரங்கீலா, சத்யா, மஸ்த், பூத் உள்பட சில படங்களில் இயக்கிய ராம் கோபால் வர்மா, அவருக்கு ஆதரவாக கூறியிருப்பதாவது: யாருடனும் அவதூறான போட்டிகளில் ஈடுபட விரும்பவில்லை. ஊர்மிளா தனது திறமையை நிரூபித்தவர். ரங்கீலா, சத்யா, பூட், ஏக் ஹசீனா தி உள்ளிட்ட படங்களில் சிக்கலான கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X