பியூட்டிபுல்.. ஹீரோவை தள்ளி விட்டு ஹீரோயினுடன் நடனமாடிய சர்ச்சை இயக்குநர்.. வைரலாகும் வீடியோ!
இயக்குனர் ராம் கோபால் வர்மா ஹீரோவை பிடித்து தள்ளிவிட்டு, ஹீரோயினை கட்டியணைத்து நடனமாடினார்.
ஐதராபாத்: இயக்குனர் ராம் கோபால் வர்மா ஹீரோவை பிடித்து தள்ளிவிட்டு, ஹீரோயினை கட்டியணைத்து நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய அம்மா ராஜ்யம் லோ கடப்பா பிட்டலு பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு சமீபத்தில் ரிலீசானது.

ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு படம் 'பியூட்டிபுல்'. அகஸ்த்தியா மஞ்சு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பார்த் சூரி, நைனா கங்குலி ஆகியோர் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லரை ராம் கோபால் வர்மா சமீபத்தில் வெளியிட்டார். ஓவர் கிளாமர், லிப் லாக் முத்தங்கள், படுக்கையறை காட்சிகள் என நிரம்பி ததும்பிய பியூட்டிபுல் டிரெய்லர் இணையத்தில் வைரலானது. இப்படம் வரும் 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று வெளியாகிறது.

இந்நிலையில் பியூட்டிபுல் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் ஹீரோ பார்த் சூரி மற்றும் ஹீரோயின் நைனா கங்குலி, மேடையில் நடனமாடினர்.
அப்போது மேடையேறிய ராம் கோபால் வர்மா, பார்த் சூரியை பிடித்து தள்ளிவிட்டு, நைனாவின் கையைப்பிடித்து இழுத்து, கட்டியணைத்து நடனமாடினார். பிறகு பார்த் சூரியை அழைத்து இப்படி தான் ஆட வேண்டும் என்பது போல் சைகை காண்பித்துவிட்டு நகர்ந்தார்.
சில நொடிகளில் மீண்டும் அவர்களை சுற்றிச்சுற்றி வந்து படம் பிடிப்பது போல் பாவணை செய்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











