என் காலை தொட்டு தேவதை என்றார்.. இன்று வேறொருத்தி காலில்.. பிரபல இயக்குநரை கிழித்த ஸ்ரீரெட்டி!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர் குறித்து பதிவிட்டுள்ள போஸ்ட் அனலை கிளப்பியிருக்கிறது.
நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஸ்ரீரெட்டி வாயை திறக்கிறார் என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்.
அதுபோல் பேஸ்புக்கில் ஏதாவது பதிவு போடுகிறார் என்றாலும் திரை பிரபலங்கள் பலருக்கும் அள்ளுவிடும். காரணம், அவர் இதுவரை கூறிய குற்றச்சாட்டுகள் அப்படி.

பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்
என்ன சாதித்திருந்தாலும் மொத்தத்திற்கும் வேட்டு வைக்கும்படி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி டேமேஜ் செய்துவிடுவார். அவரால் டேமேஜ் ஆனவர்கள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளம்.

பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி
பட வாய்ப்பு தருவதாக என்னை படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டனர் என முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களையும் வம்பிழுத்தார்.

தரக்குறைவாக விமர்சனம்
அண்மையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் முக்கிய நபராகவும் கருதப்படும் நடிகர் பவன் கல்யாண் குறித்து தரக்குறைவாக விமர்சித்தும், பகிர் குற்றச்சாட்டுக்களை கூறியும் அலறவிட்டார்.

பல பெண்கள் கர்ப்பம்
நடிகர் பவன் கல்யாண் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இருப்பதாகவும் பல பெண்களை கர்ப்பமாக்கியிருப்பதாகவும் கூறி அதிர்ச்சியளித்து வருகிறார்.

அனகோண்டா பேச்சு..
நடிகர் விஷால் குறித்து அவர் பேசிய ஆபாச பேச்சு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் திருமணம் தடைப்பட்டதற்கு ஸ்ரீரெட்டியின் அந்த அனகோண்டா பேச்சுதான் காரணம் என கூறப்படுகிறது.

நீ ஒரு தேவததை
இந்நிலையில் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மாவையும் விளாசி தள்ளியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பதிவில், ராம்கோபால் வர்மா என்னிடம் சொன்னார், ஸ்ரீ நான் உன் காலை தொட்டேன், நீ ஒரு தேவதை என்று...

ஏமாற்றிவிட்டார்
ஆனால் இப்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் வேறொரு பெண்ணின் காலை தொட்டுக்கொண்டிருக்கிறார். நான் வேதனையில் உள்ளேன்.. என தெரிவித்திருக்கிறார்.

அவரது கல்லறையே போதும்
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராம் கோபால் வர்மா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழ்ந்தாலே போதும் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்நிலையில் ராம் கோபால் வர்மா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்ச்சியடைய செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.


Click it and Unblock the Notifications











