twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராம் கோபால் வர்மாவின் படத்துக்கு வந்த திடீர் சிக்கல்.. LGBT-க்கு எதிரான நடவடிக்கை என புலம்பல்!

    |

    ஹைதராபாத்: இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படத்தை திரையிட முடியாது என மல்டி பிளக்ஸ் நிறுவனம் ஒன்று மறுத்துள்ளதற்கு எதிராக இயக்குநர் ராம் கோபால் வர்மா கொதித்தெழுந்துள்ளார்.

    ஓரினச்சேர்க்கையாளர்களின் காதலை மையப்படுத்தி டேஞ்சரஸ் எனும் லெஸ்பியன் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

    வரும் ஏப்ரல் 8ம் தேதி இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

    ரன்பீர் கபூர், ஆலியா பட்.. காதல் ஜோடிக்கு திருமணம்.. களைகட்டும் மும்பை… யார் யார் வராங்க தெரியுமா?ரன்பீர் கபூர், ஆலியா பட்.. காதல் ஜோடிக்கு திருமணம்.. களைகட்டும் மும்பை… யார் யார் வராங்க தெரியுமா?

    அந்த மாதிரி படங்களை

    அந்த மாதிரி படங்களை

    சத்யா, ரங்கீலா, ரத்த சரித்திரம் போன்ற தரமான பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களை இயக்கி வந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீப காலமாக ஆபாச படங்களை இயக்கும் இயக்குநர் என்கிற ரேஞ்சுக்கு பெயர் எடுத்து வருகிறார். அமெரிக்காவின் ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா தொடர்ந்து அந்த மாதிரியான படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார்.

    லெஸ்பியன் காதல்

    லெஸ்பியன் காதல்

    நேக்கட், கிளைமேக்ஸ் என பிட்டு பட ரேஞ்சுக்கு படங்களை இயக்கி வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணி நடிப்பில் லெஸ்பியன் காதல் கதை மற்றும் ஆக்‌ஷன் கிரைம் படமான டேஞ்சரஸ் எனும் படத்தை இயக்கி ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். தமிழில் அந்த படம் காதல் காதல்தான் என்கிற டைட்டிலில் வரும் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது.

    வெளியிட மறுத்த பிவிஆர்

    வெளியிட மறுத்த பிவிஆர்

    உச்சகட்ட கவர்ச்சி காட்சிகள் மற்றும் அரை நிர்வாண காட்சிகள் அடங்கிய ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்த நிலையில், அதற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

    LGBT கம்யூனிட்டிக்கு எதிராக

    LGBT கம்யூனிட்டிக்கு எதிராக

    உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 377 பிரிவின் கீழ் தான் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தணிக்கைக் குழுவும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு பிவிஆர் நிறுவனம் தடை விதிப்பதற்கு முக்கிய காரணமே LGBT கம்யூனிட்டிக்கு எதிரான மனப்போக்கு தான் என ராம் கோபால் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ,மனித உரிமை மீறல்

    ,மனித உரிமை மீறல்

    ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைவருமே பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் போன்ற மல்டி பிளக்ஸ் நிறுவனங்கள் இந்த படத்திற்கு விதித்துள்ள தடைக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மனித உரிமை மீறல் செயல் என ரொம்பவே பொங்கி உள்ளார்.

    English summary
    Ram Gopal Varma condemns PVR and INOX for ban Dangerous movie and they shows their Anti LGBT stand he tweeted in his twitter handle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X