திருமணம் முட்டாள்தனம்.. விவாகரத்து கொண்டாடப்பட வேண்டும்.. அமீர்கானுக்கு சர்ச்சை இயக்குநர் சப்போர்ட்!
சென்னை: திருமணத்தை விட விவாகரத்துதான் அதிகம் கொண்டாடப்பட வேண்டும் என அமீர் கான் விவாகரத்து குறித்து பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் திடீரென நேற்று முன்தினம் தனது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
அமீர்கானின் இந்த அறிவிப்பு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமீர்கான் மனைவியை மாற்றி வருகிறார் என விமர்சித்து வருகின்றனர்.

அமீர் கான் வீடியோ
மேலும் பிரபல நடிகை ஒருவருடன் அவருக்கு ஏற்பட்ட காதலே விவாகரத்துக்கு காரணம் என குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அமீர் கான் அவரது மனைவியுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

நட்போடு இருப்போம்
அதில் கணவன் - மனைவி என்கிற உறவை மட்டுமே நாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளோம். மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம். இதனை ஒரு முடிவாக பார்க்காதீர்கள். இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம் என கூறியிருந்தார்.

சுதந்திர பறவையாக
மேலும் இருவரும் இணைந்து வாழ்ந்த கடந்த 15 ஆண்டுகளும் எங்களுக்கு பொன்னான ஆண்டாகவே இருந்தது. வாழ்க்கையை நிறைய சந்தோஷ தருணங்களுடன் வாழ்ந்து முடித்து விட்டோம். இனி இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் அமீர்கான்.

பிரபல இயக்குநர் ஆதரவு
இதனால் கடந்த மூன்று நாட்களாக அமீர்கான் பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். இந்நிலையில் அமீர்கானின் விவாகரத்து முடிவுக்கு பிரபல இயக்குநரான ராம்கோபால் வர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவாகரத்து கொண்டாப்பட வேண்டும்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அமீர்கான் மற்றும் கிரண்ராவ் இருவரும் முன்பை விட மிகவும் வண்ணமயமான வாழ்க்கையை விரும்புகிறேன்.. விவாகரத்து ஒரு திருமணத்தை விட அதிகம் கொண்டாடப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் விவாகரத்துகள் அறிவு மற்றும் ஞானத்திலிருந்து நிகழ்கின்றன... மேலும் திருமணங்கள் அறியாமை மற்றும் முட்டாள்தனத்தால் நடக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சார சீரழிவு
ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்தும் சர்ச்சையாகியுள்ளது. பலரும் கலாச்சாரத்தை சீரழிப்பதே உங்களை போன்ற ஆட்கள் தான் என விளாசி உள்ளனர். அதே நேரத்தில் பலரும் நீங்கள் பேசுவது பிராக்டிக்கலாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆபாச பட இயக்குநர்
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. பிரதமர் மோடி முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரையும் விமர்சித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா. போதாகுறைக்கு சமீப காலமாக அவர் இயக்கும் படங்களும் ஆபாசமாக உள்ளதால் ஆபாச பட இயக்குநர் என்றும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











