twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “தாதா சாகேப்புக்கு அமிதாப் விருது”.. அவசரமாக போட்ட டிவீட்டை டெலிட் செய்த சர்ச்சை இயக்குநர்!

    அமிதாப்புக்கு தாதா சாகேப் விருது அளிக்கப்படுவது குறித்து ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் டிவீட் செய்துள்ளார்.

    |

    சென்னை: அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

    இந்திய திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இந்தியாவின் முதல் முழு நீளப் படமான ராஜா அரிச்சந்திரா படத்தை இயக்கியவரான தாதா சாகேப் பால்கே பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.

    இந்திய திரைத்துறையில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எல்.வி.பிரசாத், பி.நாகிரெட்டி, நாகேஸ்வர ராவ், கே.பாலசந்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1969ம் ஆண்டு முதல் இந்திய அரசின் சார்பில் இந்த வருது வழங்கப்பட்டு வருகிறது.

    நாம் அந்த நாகரீகமே கிடையாதே.. 20 வருடத்திற்கு முன்பே கீழடி பற்றி பேசிய கமல்.. வைரலாகும் வீடியோ!நாம் அந்த நாகரீகமே கிடையாதே.. 20 வருடத்திற்கு முன்பே கீழடி பற்றி பேசிய கமல்.. வைரலாகும் வீடியோ!

    அமிதாப்புக்கு விருது

    அமிதாப்புக்கு விருது

    அந்தவகையில், இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ராம் கோபால் வர்மா டிவீட்

    ராம் கோபால் வர்மா டிவீட்

    இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், "தாதா சாகேப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அவருடைய ராஜா அரிச்சந்திரா படத்தை பத்து நிமிடம் கூட என்னால் பார்க்க முடியவில்லை.

    கோபம்

    கோபம்

    ஆனால் அமிதாப்பின் ஒவ்வொரு படத்தையும் பத்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். எனவே நியாயப்படி தாதா சாகேப்க்கு தான் அமிதாப் பச்சன் விருது வழங்க வேண்டும்", என அவர் பதிவிட்டிருந்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த டிவீட்டைப் பார்த்து சினிமா ரசிகர்கள் ஆவேசமாகி விட்டனர். அமிதாப்பை பாராட்ட வேண்டும் என தாதா சாகேப்பை குறைவாகக் குறிப்பிடுவதா என்பதே அவர்களது கோபம்.

    டிவீட் நீக்கம்

    டிவீட் நீக்கம்

    அதோடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா ஏற்கனவே சர்ச்சைக்கு பெயர் போனவர். எனவே இந்த டிவீட்டும் டக்கென சர்ச்சையானது. இதனால் தனக்கு பிரச்சினை வரும் என உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராம் கோபால் வர்மா, சிறிது நேரத்திலேயே அந்த டிவீட்டை நீக்கிவிட்டார்.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    இருப்பினும் அவரது டிவீட்டை ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து, நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். ராஜா அரிச்சந்திரா மாதிரியான ஒரு படத்தை தாதா சாகேப் தரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் இன்று திரையுலகப் பிரபலம் என்றே சொல்லிக் கொண்டு இப்படி டிவீட் போட்டுக் கொண்டிருக்க முடியாது என நெட்டிசன்கள் ராம் கோபால் வர்மாவை திட்டி வருகின்றனர்.

    English summary
    The popular director Ram Gopal Varma marks a controversial comment about Dhadha Saheb Phalke award announced to bollywood actor Amitabh Batchan. Removes the tweet immediately after it went viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X