இரவு பார்ட்டியில் நடிகையுடன் உல்லாச நடனம்.. பிரபல இயக்குநரை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : சர்ச்சைக்கு பெயர் போன பிரபல இயக்குநர் இரவு பார்ட்டியில் நடிகையுடன் உல்லாசமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவர்.
இவருடைய படங்கள் எப்போது வெளியானாலும் அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சையை கிளப்பிவிடும்.

சர்ச்சை நாயகன்
பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என பெயர் எடுத்தவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பாலிவுட்டே பயந்து ஓரமாய் ஒதுங்கிவிடும்.

18+ திரைப்படங்கள்
கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேக்டு போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம்சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே எடுத்து வருகிறார்.

லெஸ்பியன் படம்
ராம்கோபால் வர்மா சமீபத்தில் 'டேஞ்சரஸ்' என்ற லெஸ்பியன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில், இரண்டு பெண்களின் உறவு முறைபற்றிய படமாகும். லெஸ்பியன் பற்றிய படம் என்பதால், இந்த படமும் வெளியாவதில் சிக்கலை சந்தித்தது. அதே போல, மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் 'லடுக்கி' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி இருந்தார்.

நடிகையுடன் உல்லாசம்
இந்நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா இரவு பார்ட்டியில் நடிகை இனியா சுல்தானாவுடன் உல்லாசமாக டான்ஸ் ஆடி உள்ளார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இதே வேலைதான், எப்போதும் இவர் இருக்கும் இடத்தில் குறைந்தது இரண்டு பெண்களாவது இருக்கனும் அப்போத்தான் அய்யா ஹேப்பியா இருப்பாரு என்று விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











